தாயார்களுக்கு ஏற்பட்ட இதயக்கோளாறால்தான் சிசுக்கள் இறந்தன.. கூறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி: தர்மபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த சிசுக்களின் தாயார்களுக்கு இருந்த இதயக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகத்தான் சிசுக்கள் மரணமடைய நேரிட்டதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அங்கு தீவிர மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் பூனாட்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரசவ வார்டில் தேசிய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 40 சதவீதமாகும். இது தமிழகத்தில் 21 சதவீதமாக உள்ளது.
பச்சிளம் குழந்தைகள் இறப்புக்கு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது மட்டும் காரணம் அல்ல. இதய நோய், இதய கோளாறு, ரத்த சோகை உள்ளிட்ட நோய்களால் தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிசு மரணங்கள் நிகழ்கிறது.
கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக வராமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைக்கு சென்று பின்னர் தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வருவதால் கால விரயம் ஏற்பட்டு குழந்தைகள் இறந்து விடுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் 2 ஆயிரம் குழந்தைகள் பிறக்கிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இம்மாத இறுதிக்குள் 2,160 எம்பிபிஎஸ் டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு முடிந்து, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் 1,762 எம்எஸ், எம்டி டாக்டர்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications