டிடிவி தினகரனை நான் வாழ்த்தவில்லை... அது பொய் - போலீசில் அமைச்சர் உதயகுமார் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனை வாழ்த்தி ட்விட்டரில் தனது பெயரில் வெளியான செய்திக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

My Twitter account has been hacked, says minister RB Udayakumar

டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சில எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக நேரடியாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தினகரனை வாழ்த்தி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தகவல் வெளியானது.

தினகரனின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன் என்றும், அம்மாவின் ஆன்மா தினகரனை ஆசிர்வதித்துள்ளதுள்ளதாகவும் உதயகுமார் பதிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த பதிவு, அதிமுக அமைச்சர்ககள் எம்எல்ஏக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் அது பொய் என்றும் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறி விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் உதயகுமார்.
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 18ஆம் தேதியன்று தினகரன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட புகைப்படம் எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதை நீக்க புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் சுயேட்சை தினகரனை வாழ்த்துவது போல ஒரு பதிவு எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனது பெயருக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதனை பதிவிட்டுள்ளனர். இதனை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து இரண்டு பதிவுகளும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister RB Udayakumar has said that his Twitter account has been hacked and he never wished Dinakaran for winning RK Nagar.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X