சசிகலா குடும்பத்துக்கு எதிராக விஸ்வரூபமெடுக்கும் நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சை விவகாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விஸ்வரூபமெடுக்கும் நடராஜன் உறுப்பு மாற்று சிகிச்சை விவகாரம்!-வீடியோ

  சென்னை: சசிகலா குடும்பத்துக்கு எதிராக விஸ்வரூபமெடுக்கிறது நடராஜனின் உறுப்பு மாற்று சிகிச்சை விவகாரம் என கூறப்படுகிறது.

  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அனுமதிக்கப்பட்டார் நடராஜன். அவரை கல்லீரல் மாற்று சிகிச்சையில் உலகப் புகழ்பெற்ற முகமது ரேலா தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

  இரண்டு முறை அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்தும் உறுப்பு தானம் கிடைக்காததாலும், நடராஜனின் உடல் ஒத்துழைக்காததாலும் அது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் என்பவர் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தார்.

  உடலையே எடுத்து சென்றதால் சர்ச்ச

  உடலையே எடுத்து சென்றதால் சர்ச்ச

  இனி பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியதால், நடராஜனுக்கு கார்த்திக்கின் உடல் உறுப்புகளை அளிப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அதேநேரம், மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளைக் கொண்டு செல்லாமல், உடலையே எடுத்துச் சென்றதில் மருத்துவ விதிகள் மீறப்பட்டதாகத் தகவல் வெளியானது.

  சரியாக நடந்ததாக விளக்கம்

  சரியாக நடந்ததாக விளக்கம்

  இதையடுத்து, கார்த்திக்கின் சகோதரி பிரேமலதா கூறுகையில், என்னுடைய தம்பி பைக்கில் சென்றபோது, கார் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உடல்நிலை மோசமாக இருந்தது. சென்னைக்குக் கொண்டு சென்றால் குணமடைய வாய்ப்பு உள்ளது என டாக்டர்கள் கூறியதால், சம்மதம் தெரிவித்தோம். இதற்காக சிலர் கார்த்திக்கை சென்னைக்கு கொண்டு செல்ல உதவிகள் செய்தனர்.

  யாரும் கட்டாயப்படுத்தவில்லை

  யாரும் கட்டாயப்படுத்தவில்லை

  ஆனால் இங்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது. அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். அவனுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தோம். அப்போது எங்களிடம் சில டாக்டர்கள், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற உடல் உறுப்புகள் தேவைப்படுவதால் கார்த்திக்கின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரலாம்' என்று அறிவுரை கூறினார்கள். என் தம்பியின் உறுப்புகளை யாருக்குப் பொருத்தப் போகிறார்கள் என்ற தகவலை எங்களிடம் சொல்லவில்லை. என் தம்பியால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்பதில் பெருமை அடைகிறோம். இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை. எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

  திருப்பூரில் இருந்து திரும்பிய போது விபத்து

  திருப்பூரில் இருந்து திரும்பிய போது விபத்து

  கார்த்திக்கின் உறவினர்களோ, அவங்க குடும்பமே ரொம்ப ஏழ்மையானது. பிரிண்ட்டிங் பிரஸ், பேனர், பிளக்ஸ் என கிடைக்கும் வேலைகளை கார்த்திக் செய்து வந்தான். நிரந்தரமாக எந்த வருமானமும் இல்லாததால், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போனான். அப்பா, அம்மாவுக்கு வயதாகிவிட்டது. திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தபோதுதான் விபத்தில் சிக்கினான்.

  கைவிரித்த மருத்துவர்கள்

  கைவிரித்த மருத்துவர்கள்

  அறந்தாங்கி ஜி.எச்சில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. அங்கிருந்து தஞ்சாவூருக்குக் கொண்டு போனாங்க. அப்ப தலையில் ஸ்கேன் எடுத்த டாக்டர், 'இனி பிழைக்க வாய்ப்பில்லை'ன்னு சொன்னார்.

  மூளைச்சாவு என அறிவிப்பு

  மூளைச்சாவு என அறிவிப்பு

  சென்னையில் இருக்கிற குளோபல் மருத்துவமனைக்கு அக்டோபர் 3-ந் தேதி கொண்டு வந்தோம். மறுநாள் மூளைச்சாவு அடைஞ்சதா சொன்னாங்க. ஆனால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், எங்களுடைய அறிவுரையை மீறி கார்த்திக்கின் உடலை எடுத்துச் சென்றுவிட்டனர். அவர் மூளைச்சாவு அடைந்ததாக எங்கள் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சென்னைக்கு கொண்டு சென்றதும் தனியார் மருத்துவமனை கார்த்திக் குறித்து முடிவு செய்திருக்கலாம் என்கிறார். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது என்கின்றனர்.

  சசி குடும்பத்துக்கு எதிராக

  சசி குடும்பத்துக்கு எதிராக

  தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பில் தானம் வேண்டி, ஏப்ரல் மாதம் பதிவு செய்திருக்கிறார் நடராஜன். ஆனால், அவருக்கான உறுப்பு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்துள்ளன. இந்நிலையில், இளைஞர் உண்மையிலேயே மூளைச்சாவு அடைந்தாரா என்ற சந்தேகத்தை மருத்துவர்கள் எழுப்பியிருப்பது, இந்த விவகாரத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. சசிகலா குடும்பத்துக்கு எதிரான முக்கிய ஆயுதமாக உறுப்பு மாற்று விவகாரம் கிளறப்படலாம் என கூறப்படுகிறது.0

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mystery continues in organ donation for Sasikala's husband M Natarajan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற