பயங்கரவாதிகள் ஆட்சியில் மக்கள் தீவிரவாதிகளாகத்தான் தெரிவார்கள் - சீமான் அதிரடி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் போது மக்கள் அனைவரும் தீவிரவாதிகள், நக்சல்களாகத்தான் தெரிவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

Seeman Slammed CM Edappadi Palanisamy-Oneindia Tamil

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், போராடுகிறவர்கள் குண்டாஸ் என்றால், அப்படி போராடும் நிலைக்கு மக்களைத் தள்ளியவர்களை என்ன சட்டத்தில் சிறைக்கு அனுப்புவது? மக்கள் பொழுதுபோகாமல் போராடவில்லை. எங்கள் தாய் நிலத்தின் வளம் பாழாகிறது, தண்ணீர் நஞ்சாகிறது என்றுதானே போராடுகிறோம்?

Naam tamilar katchi chif coordinator Seeman slammed the TN government

''பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் போது அவர்கள் பார்வைக்கு மக்கள் தீவிரவாதிகளாகவும், நக்சல்களாகவும் சமூகவிரோதிகளாவும் தேசத்துரோகிகளாகவும்தான் தெரிவார்கள்.

போராடுகிரவர்களின் மீது குண்டர் சட்டத்தை போட்டுக் கைதுசெய்தால் ஆட்சி நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்கிறது என அர்த்தமாகிவிடுமா? இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டுகிற காலம் விரைவில் உருவாகும்'' என சீமான் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar katchi chief coordinator criticized that government itself a terrorist and this regime will lose its' power soon.
Please Wait while comments are loading...