நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க உள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவரை பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள ஸ்டாலின், அடுத்த கட்ட பயணத்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்குகிறார்.

இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா கற்பனையான கதைகளை கூறி நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை சுட்டிக் காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழக மக்களை மட்டுமின்றி ஜெயலலிதாவையும் இந்த பயணம் கவர்ந்துள்ளது. அவரது மனதில் நமக்கு நாமே பயணம் ஆழமாக பதிந்துள்ளது மகிழ்ச்சி.
சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பேன் என்று ஜெயலலிதா கூறி இருப்பது அதிமுகவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி. ஊழல் மிகுந்த இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட கூடிய பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். செயலற்ற ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் 2016ம் ஆண்டு அமையும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அடுத்த வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரை விடுபட்ட 22 தொகுதிகளில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தை மேற்கொள்ளப்படும் என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications