விண்வெளியில் படம் பார்த்த நாசா வீரர்கள்... என்ன படம்.. எப்படி பார்த்தார்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாசா வீரர்கள் விண்வெளியில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஒன்றாக சேர்ந்து படம் பார்த்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு 2015ல் இதுபோல வீரர்கள் ஒன்றாக படம் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பார்க்கும் நிகழ்வில் நாசா விண்வெளி வீரர்கள் மட்டும் இல்லாமல் ஜப்பான், ரஷ்ய விண்வெளி வீரர்களும் கலந்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த நிகழ்வு குறித்து நாசா வீரர் சந்தோசமாக டிவிட் செய்து இருக்கிறார்.

இதுபோல் விண்வெளியில் படம் பார்ப்பது மிகவும் சாதாரண விஷயம் இல்லை. இதற்காக வித்தியாசமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சினிமா

சினிமா

நாசா மற்றும் மற்ற சில நாடுகளின் ஸ்பேஸ் ஸ்டேஷன் விண்வெளியில் இருக்கிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பல நாட்களாக விண்வெளியில் தனித்து இருப்பதால் இவர்களுக்கு அதீத தனிமை உணர்வு ஏற்படும். இதை போக்குவதற்காக அனைவருக்கும் சில நாள் முன்பு படம் போட்டு காட்டப்பட்டு இருக்கிறது.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

இதற்காக நாசா டிஸ்னி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. அதன்படி டிஸ்னி தனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அருகில் செயற்கை கோள் உதவியுடன் இந்த படங்கள் அங்கு ஒளிபரப்பாகும். டிஸ்னி நிறுவனம் மட்டுமே தற்போது இந்த வசதியை வழங்கி வருகிறது.

வைரல் டிவிட்

இதுகுறித்து நாசா விண்வெளி வீரர் மார்க்.டி.வாண்டே ஹெய் டிவிட் செய்து இருக்கிறார். அதில் ''ஸ்பேஸ் ஸ்டேஷனின் சினிமா இரவு. இந்த இரவு குளிர்பானங்களாலும், அறிவியல் படம் மூலமும் முழுமை அடைந்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த டிவிட் வைரல் ஆகி உள்ளது.

படம்

படம்

ஸ்பேஸ் ஸ்டேஷனில் அவர்கள் என்ன படம் பார்த்தார்கள் என்று அவர் தனது டிவிட்டில் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த புகைப்படத்தில் இருந்து அவர்கள் தற்போது ரிலீசாகி உள்ள 'ஸ்டார் வார்ஸ் : தி லாஸ்ட் ஜெடி' என்ற படம் பார்த்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஏற்கனவே 2015ல் வீரர்கள் ''ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவெக்கன்ஸ்'' படம் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NASA astronauts watched movie in space station. They have seen the new hollywood movie 'Star Wars: The Last Jedi' In Space.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற