தயார் நிலையில் 9 தேசிய பேரிடர் குழுக்கள்... மீட்பு உபகரணங்களும் ரெடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடசென்னை பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

NDRF teams are getting ready to tackle the rainy situation

மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ளோரையும், வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களையும் மீட்பதற்காக சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய முகாம்களைச் சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் உள்ளனர். மீட்பு பணிகளுக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
National Disaster Response Force from Chennai and Arakkonam are getting ready to tackle the rainy season and rescuing activities.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற