நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக 123-ஆவது நாள் போராட்டம்- கைகளில் சூடம் ஏற்றிய மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 123 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் தங்கள் கைகளில் சூடம் ஏற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசல் மக்கள் ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Neduvasal people protest against Hydrocarbon for 123 rd day

இன்று 123-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இவர்களது கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் எத்தனையோ கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டும் இவர்களது குரல் அரசின் காதில் விழவில்லை.

இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராம பெண்கள் கைகளில் சூடம் ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும், மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neduvasal protest today attains 123rd day. So the people of Neduvasal shows their oppose by lighting camphor in their hands.
Please Wait while comments are loading...