சூரியன் எப்போதும் உதிக்கும்.. கருணாநிதியின் உடல்நிலை குறித்து நெகிழ்ந்த நெட்டிசன்ஸ்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று இரவு சரியில்லாமல் போனதை அடுத்து, சமூக வலைதளங்களில் பலர் அவரை குறித்து பேசினார்கள்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அவரது உடல்நிலை குறித்து நேற்று சமூக வலைத்தளங்களில் பலர் உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.
இருக்காங்க
சிலர் எப்போதும் போல மருத்துவமனையில் தங்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கூறினார்கள் என்று கதை விட்டனர். அதை இவர் கிண்டல் செய்து ''அட நிஜமாடா அந்த ஆஸ்பத்திரில வேலை செய்யுர எங்க சொந்தகார்ருதான்டா சொன்னாரு...''என்றுள்ளார் .
திமுக தலைவர்
திமுக தலைவர் கலைஞர் 50 என்று இவர் மீம் போட்டுள்ளார்.
|
பன்ச் வசனம்
இவர் '' கலைஞர் இன்று பேசக்கூடிய சூழ்நிலையில் இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வந்தது..
என் வீட்டிற்கு காவேரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்தார்கள் என பஞ்ச் அடித்திருப்பார் !'' என்றுள்ளார்.
|
50 வயது மட்டுமே
இன்று திமுக தலைவராக கருணாநிதி 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனால் இவர் ''முத்துவேல் கருணாநிதி'க்கு தாங்க வயசு 95. தலைவர் கலைஞர் கருணாநிதி"க்கு வயசு 50"மட்டுமே என்றுள்ளார்.
|
நலம் விசாரித்தார்
இவர் ''தன்னை பார்க்க வந்த ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமாரின் உடல் நலனை விசாரித்து அனுப்பி வைத்தார் கலைஞர்'' என்றுள்ளார்.
|
மீண்டும் சூரியன்
ரோஹித் சர்மாவின் பழைய டிவிட்டை ஷேர் செய்து நாளை மீண்டும் சூரியன் உதிக்கும் என்று இவர் கூறியுள்ளார்.
எப்போதும் இருக்கும்
இவர் '' எப்போதெல்லாம் அவர் இல்லை என்று செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த நாள் காலை 5 மணிக்கே எழும் ஆற்றல் அவருக்குண்டு...இப்போதும் கூட இருக்கும் !!'' என்றுள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!