தியாகராஜர் ஆராதனையில் விளம்பரமா? டிடி மீது பாய்ந்த டிபென்ஸ் மினிஸ்டர்- நெட்டிசன்ஸ் லகலக

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவையாறு தியாகராஜர் ஆராதனையை ஒளிபரப்பிய தூர்தர்ஷனில் விளம்பரம் போடப்பட்டதால் கொந்தளித்து போய் ட்விட்டரில் பதிவிட்டார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரது இந்த பதிவில் நெட்டிசன்கள் விமர்சனங்களை வகைதொகையில்லாமல் குவித்து வருகின்றனர்.

திருவையாறில் தியாகராஜர் ஆராதனைகளை பாடும் இசை நிகழ்ச்சியை கடந்த 5-ந் தேதி தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. இதை ரசித்துக் கொண்டே லைவ்வாக ட்விட்டரில் பதிவுகளை போட்டு வந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

திடீரென ஒரு பதிவில், தியாகராஜர் ஆராதனையை ரசிக்க விடாமல் விளம்பரங்களை ஒளிபரப்பிவிட்டதே தூர்தர்ஷன் என கோபத்தையும் அவர் காட்டியிருந்தார். நிர்மலா சீதாராமனின் இந்த ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களது பாணியில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மீனவர் பிரச்சனை

திருந்தாவன் என்ற பெயரில் வலம் வரும் இந்த நெட்டிசன், மீனவன் சாக கிடக்கும்போது அரசு நிர்வாகம் செயல் இழந்து கிடந்தப்ப இதே வேகத்துல நடவடிக்கை எடுத்துதிருக்கலாமே? என சீறியுள்ளார்,

100 மீனவர்கள் பலி

டுவீட்டாளர் என்ற இந்த நெட்டிசனோ, உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறந்த போது, 100 மீனவர்களை கடலில் இழந்த போது இந்த நடவடிக்கையை உங்களிடம் இருந்து பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டுள்ளார்.

எரியும் பிரச்சனைகள் ஏராளம்

இவரோ, நிகழ்ச்சி ஒளிபரப்பை தூர்தர்ஷன் நிறுத்தவில்லை. கமர்ஷியல் விளம்பரம்தான் போட்டிருக்காங்க.. நாம எதிர்வினையாற்ற பிரச்சனைகள் ஏராளம் என கொட்டியிருக்கிறார்.

மீனவர்கள் காணாதபோது...

மீனவர்கள் காணாதபோது...

மணிகண்டன் என்ற ட்விட்டர்வாசி, "தமிழக மீனவர்கள் தாக்கப்படுறாங்க அதுக்கு ஒரு தீர்வு எடுக்காம, நீங்க தியாகராஜ ஆராதனை டிவில ஓடலனு வருத்தப்படுறீங்களே மேடம்...😕" என அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Netizens reactions on the Union Defence Minister Nirmala Sitharaman's anger against the DD TV Channel for cut-off the Tyagarajar musical event and air an advertisement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற