For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டலூர் உயிரியல் பூங்காவில்.... நெருப்புக்கோழி குஞ்சு பொறித்தது!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக் கோழி குஞ்சு பொறித்துள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நெருப்புக்கோழி, குஞ்சு ஒன்றினை 09.09.2015 அன்று பொறித்தது. இத்துடன் இப்பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகளின் எண்ணிக்கை பன்னிரண்டாக உயர்ந்துள்ளன.

New ostrich chick in Vandalur zoo

ஆப்பிரிக்காவில் பரந்த நிலப்பகுதிகளிலும்; சவானா புல்வெளி பகுதிகளிலும் காணப்படும் நெருப்புக்கோழிகள் உயிரியல் பூங்காக்களில் இயற்கையாக அடைக்காத்து குஞ்சு பொறிப்பது அரிதானதாகும். இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் இப்பூங்காவில் பராமரிக்கப்படும் நெருப்புக்கோழிகள் மட்டுமே இயற்கையான முறையில் அடைக்காத்து குஞ்சு பொறிப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆண் பெண் இரண்டும் சேர்ந்தே அடைக்காப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது இப்பறவைகளில் காணப்படும் சிறப்பாகும்;.

2008ம் ஆண்டு காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழிகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு நெருப்புக்கோழிகளும் இணை சேர்ந்து முட்டையிட்டு ஐந்து முறை அடைக்காத்து பதினாறு குஞ்சுகளைப்; பொறித்துள்ளன.

New ostrich chick in Vandalur zoo

இப்பறவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்வதால் இந்தியாவில் உள்ள இதர பூங்காக்கள் இதைக் காட்சிப்படுத்த மிகவும் ஆர்வம் கொண்டுள்ளன. இதனால் விலங்குகள் பறிமாற்ற முறையில் இப்பறவையைப் பெறுவதற்கு அதிகப்படியான கோரிக்கைகள் வருகின்றன. இதர பூங்காக்களுக்குக் கொடுப்பதன் மூலம் புதிய உயிரினங்களைப் பெறுவது சாத்தியமாவதுடன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் உயிரினங்களின் எண்ணிக்கை உயர்வதற்கும் காரணமாகவுள்ளது.

இப்பூங்காவிலிருந்து இதுவரை ஆறு நெருப்புக்கோழிகள், விலங்குகள் பறிமாற்ற முறையில் இதர பூங்காக்களுக்குக் கொடுக்கப்பட்டு, காட்டுக் கழுதை, புருவ கொம்பு மான், சதுப்பு நில மான், கருப்பு அன்னம், நீல மஞ்சள் மக்கா கிளிகள், வல்லாபி மற்றும் தங்க நிறக் கோழிகள் ஆகியன பெறப்பட்டுள்ளன.
நெருப்புக்கோழிகள் பறக்கா பறவைகள் குடும்பத்தை சேர்ந்ததாகும். கிவி, ஈமு, ரியாஸ் மற்றும் கேஸோவரி போன்ற பறவைகள் நெருப்புக்கோழி பறவை வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பறவைகளிலேயே நெருப்புக்கோழி பல சிறப்புகளைப் பெற்றதாகும். பறவைகளிலேயே நீண்ட கழுத்தும், நீண்ட கால்களையும் உடையது. நிலத்தில் ஒடும் பறவைகளிலேயே மிக வேகமாக மணிக்கு 70 கி.மீ ஓடக்கூடியது. பறவைகளிலேயே மிகப்பெரிய பறவையான இது, உலகிலேயே மிகப்பெரிய முட்டை இடக்கூடியதாகும். உலகத்திலிருந்து அழிந்து போன மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவை, நீயுசிலாந்தில் வாழ்ந்த பெரிய மோவா ஆகிய பறவைகள்தான் நெருப்புக்கோழி முட்டைகளைவிட பெரிய முட்டைகள் இடுபவையாக இருந்தன.

சிறப்பான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சூற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகள் மூலம் உருவாக்கப்பட்ட இயற்கையையொத்த சூழல் போன்ற காரணங்களால் இப்பூங்காவில் நெருப்புக்கோழிகள்; முட்டையிட்டு அடைக்காத்து இயற்கையாகக் குஞ்சு பொறிப்பது சாத்தியமாகிறது. சில சமயங்களில் வெளிப்புற ஆபத்து வரும்பொழுது குஞ்சுகளைப் பாதுகாக்க தாய் மற்றும் தந்தை பறவைகள் அங்குமிங்கும் ஓடும்பொழுது குஞ்சுகள் மிதிபட்டு இறந்துவிடுகின்றன. இதுபோன்ற நேர்வுகளில் குஞ்சுகள் உடனடியாகப் பிரிக்கப்பட்டு கைவளர்ப்பு மூலம் அவைகள் வளர்க்கப்படுகின்றன.

இப்பூங்காவில் இதுவரை 11 நெருப்புக்கோழிகள் வெற்றிகரமாகக் கைவளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டுள்ளன என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
An ostrich egg hatched at the Arignar Anna Zoological Park, Vandalur, on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X