பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களில் புதிய பாடத் திட்டம்.. செய்தியாளர்களிடம் அறிவித்த செங்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அந்தத்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் பல புதிய அறிவிப்புகளைக் கூறினார்.

New syllabus will be introduced within 3 month school students: Senkottaiyan

அதாவது, பள்ளி மாணவர்களுக்கு 3 மாதத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறினார். போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள 54,000 கேள்வி தொகுப்பு 15 நாட்களில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

பாட திட்டங்களை மாற்ற 3 நாட்கள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். பல்வேறு கல்வி நிபுணர்கள், அறிஞர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எந்த ஒரு பொதுத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக மாணவர்கள், எந்த போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் மாற்றிக் காட்டுவோம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களுக்கு கணினியுடன் வைபை வசதியை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
School Education Minister Senkottaiyan said that a new syllabus will be introduced within 3 month school students. 54000 questions will be released within 15 days he said.
Please Wait while comments are loading...