For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு கனமழை மட்டுமே... புயல் தாக்காது- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைக்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை. மழைக்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    இது 'மொக்க' காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம்..- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம். ஆனால், நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்தது போன்றோ, அல்லது கன்னியாகுமரியில் ஓகி புயலால் பெய்த மழை போன்றோ மிக கனமழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.

    சென்னையை வரும் நாட்களில் மிகப்பெரிய புயல் தாக்கப் போகிறது என்று பரபரப்பை உண்டாக்கிய நம் ஊடகங்கள் கணிப்பு அனைத்தும் வீணாகப் போகிறது என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.

    வரும் வாரங்களில் தமிழக மழை நிலவரம் பற்றி வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு:

    காற்றழுத்த தாழ்வு நிலை

    காற்றழுத்த தாழ்வு நிலை

    கடந்துசென்ற ஓகி புயலை பரபரப்பான செய்தியாக மாற்றி இருப்பது அவசியம், அதை விட்டுவிட்டோம். ஆனால், இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது ஒன்றுமில்லாதது... இது மொக்க டிப்ரசன். இதற்கு இந்த அளவுக்கு பரபரப்பு உண்டாக்க அவசியம் இல்லை.

    சென்னையை புயல் தாக்காது

    ஆதலால், மக்களை அச்சுறுத்தும் வகையில், புயல் குறித்து பரபரப்பாக செய்திகளை வெளியிடுவதை தவிர்க்கலாம். வரும் வாரத்தில் சென்னைக்கு எந்தவிதமான புயல் எச்சரிக்கையும் இல்லை.

    வலுவிழக்க வாய்ப்பு

    வலுவிழக்க வாய்ப்பு

    தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி , தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் கூட, அது ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும்.

    ஓகி புயல் போல வராது

    ஓகி புயல் போல வராது

    மழை இருக்கும், ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு மழை இருக்காது. கனமழையோ அல்லது மிகமிக கனமழையோ கூட இருக்கலாம். தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம். ஆனால், நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்தது போன்றோ, அல்லது கன்னியாகுமரியில் ஓகி புயலால் பெய்த மழை போன்றோ மிக கனமழை இருக்காது. மக்களை மிரட்டாத அளவுக்கு கனமழை இருக்கும்.

    கடல் கொந்தளிப்பு

    கடல் கொந்தளிப்பு

    வரும் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். ஆதலால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். அபாயம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், புயல் தாக்கும் அபாயம் இல்லை என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.

    English summary
    TamilNadu weatherman posted his facebook page, No Cyclone Threat to Tamil Nadu in coming week. Yes the Depression will form and will become Deep Depression too and in worst case a cyclone too but it is expected move towards Andhra and weaken under lot of un-favorable conditions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X