For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் உள்ளது - சசிகலா ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: எத்தனை எதிரிகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் என்னிடம் உள்ளது என சசிகலா தெரிவித்துள்ளார். நல்ல செய்தி வரும் வரை அமைதிப் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் கட்சியை கைப்பற்றிய அவர், ஆட்சியையும் கைப்பற்ற தீவிரம் காட்டினார்.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என 2ஆக பிரிந்துள்ளது. முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

யாரும் பிரித்தாள முடியாது

யாரும் பிரித்தாள முடியாது

ஒபிஎஸ் அணிக்கு பெருகும் ஆதரவைக் கண்டு பீதியடைந்த சசிகலா போயஸ்கார்டன் முன்பு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் இன்று பேசினார். அப்போது அதிமுகவை யாரும் பிரித்தாள முடியாது என்று அவர் கூறினார்.

எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிப்பேன்

எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிப்பேன்

அதிமுகவிற்கு விசுவாமாக இல்லை என்பதை பன்னீர்செல்வம் நிரூபித்து விட்டார் என்றும் சசிகலா குற்றம்சாட்டினார். எத்தனை எதிரிகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் தம்மிடம் உள்ளதாக சசிகலா தெரிவித்தார்.

யாராலும் எதுவும் செய்ய முடியாது

யாராலும் எதுவும் செய்ய முடியாது

தொண்டர்கள் அதரவளிக்கும் வரை யாராலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றார். கடந்த 33 ஆண்டுகளாக இதுபோன்ற சலசலப்புகளை சந்தித்துதான் இங்கு வந்திருப்பதாக கூறினார்.

நல்ல சேதிக்காக காத்திருக்கிறேன்

நல்ல சேதிக்காக காத்திருக்கிறேன்

நல்ல செய்திக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அதுவரை அமைதிப் போராட்டம் தொடரும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

கெட்டப் பெயர் வரும் வகையில் போராடக்கூடாது

கெட்டப் பெயர் வரும் வகையில் போராடக்கூடாது

அரசுக்கு கெட்டப் பெயர் வரும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது. இவ்வாறு சசிகலா போயஸ் கார்டன் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்களிடம் பேசினார்.

English summary
Sasikala saying front of the people in poes garden that No matter how many enemies comes i have skille to face them. He said that the peaceful struggle will continue until the good news comes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X