தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம்.. கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகை: ஜே.பி.நட்டா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை விமான நிலையத்தில் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு ஏற்ற வகையில் தமிழகத்து கிராமப்புற மாணவர்கள் தயாராகவில்லை என்பதால் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தமிழக சட்டசபை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அது குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் நட்டா இவ்வாறு கூறியுள்ளார்.

No relaxation to Tamilnadu for NEET: JP Nadda

தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை. நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும். கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது மாநில அரசின் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் மாநில அரசு சிறப்பு ஒதுக்கீடு கொடுக்கலாம். அதை மாநில அரசே தீர்மானித்துக்கொள்ளலாம்.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்ரகள், மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் தமிழக அரசு வாதம். எனவே இந்த சலுகையை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்குகிறது என்றார், ஜே.பி.நட்டா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NEET should go forward which giving good results, and no relaxation to Tamilnadu says JP Nadda, Health minister.
Please Wait while comments are loading...