ஓவியா இல்லைன்னா... பிக்பாஸ் பார்க்கமாட்டோம்... வீணாய்ப் போன ஓவியா ஆர்மிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். இனி பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஓவியாஆர்மி, சேவ் ஓவியா, ஓவியா புரட்சிப் படை, ஓவியா பேரவை என்று எண்ணற்ற குரூப்கள் உருவாகி ஓவியாவை பாதுகாத்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் ஓவியா பலமுறை வெளியேறும் சூழல் ஏற்பட்ட போதும், ஓவியா ஆர்மியின் வாக்குகளை அதிக அளவில் பெற்று ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம்பிடித்தார்.

தற்போது ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனத்.

ட்ரெண்ட் ஆன ஓவியா

ட்ரெண்ட் ஆன ஓவியா

சமூக வலைத்தளத்தில் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை #NoOviya NoBiggboss என்ற ஹாஷ்டாக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

மனசை கெடுத்துட்டாங்களே

இதனால் கவலை அடைந்த ஓவியா ரசிகர்கள் ட்விட்டரில் NoOviyaNo Biggboss, OviyaForEver, BanBiggBoss என பல ஹேஸ்டேக் பதிவிட்டு தங்களது கவலைகளை கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர். ஓவியா மனதை கெடுத்து விட்டதாக வருத்தத்துடன் பேசியுள்ளார் ஒரு பாட்டி.

போறாளே பொன்னுத்தாயி

ஓவியா வீட்டை விட்டு வெளியேறுவதை வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். கருத்தம்மா பாட்டுதான் அவருக்கு கிடைத்தது.

இனி பிக்பாஸ் அம்புட்டுதான்

ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, ஓவியா எப்போதும் வேண்டும், ஓவியா வெளியேறிவிட்டால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் டிவிக்கு பயமேன்

ஓவியா வெளியேறி விட்டதால் கமல் பற்றிய புரமோ கூட போடாமல் விஜய் டிவி பந்து விட்டதாக ஓவியா புரட்சிப்படையினர் பதிவிட்டு வருகின்றனர்.

நான் என்ன சொல்வேன்

கேரளா போயிருக்கிற எங்க பஞ்சாயத்தார் திரும்பி வந்து ஓவியா எங்கன்னு கேட்டா, நான் என்னானுடா சொல்வேன் என்று கமல் படத்தையே போட்டு மீம்ஸ் பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oviya played the role of a lovelorn girl for some time, before refusing to continue being in character.Oviya, who was most loved contestant in the Bigg Boss house for the last two weeks. Twitter trend NoOviyaNo Biggboss,OviyaForEver, BanBiggBoss.
Please Wait while comments are loading...