கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை - வானிலை மையம் ஜில் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு யைம இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்றுமுதல் தீவிரமடைய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

பருவமழை தீவிரம்

பருவமழை தீவிரம்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை ஒருவாரம் தாமதமாக தொடங்கியுள்ளது. இருப்பினும், இயல்பைவிட அதிகம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அணைகளில் நீட்மட்டம்

அணைகளில் நீட்மட்டம்

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்திருந்தாலும் கூட, பெரும்பாலான மாவட்டங்களில் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவத்தில் அதிகளவு மழை கொடுக்கும் என்ற செய்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கொட்டிய கனமழை

கொட்டிய கனமழை

சென்னையில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. திடீரென வானம் இருண்டு மழை மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. மழையுடன் சேர்த்து வெயிலும் அடித்தது. அதேபோல், பல்லாவரம், மாங்காடு, பம்மல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களில் கனமழை

கடலோர மாவட்டங்களில் கனமழை

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், காற்றழுத்த தாழ்வுநிலையால் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வெள்ளம், புயல் பற்றி வதந்தி

வெள்ளம், புயல் பற்றி வதந்தி

பருவமழை தாமதத்துக்கும், மழை அளவு குறையும் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 4 நாட்கள் மற்றும் 5 நாட்களுக்கு முன்பாக மட்டுமே கனமழை பற்றி கணிக்க முடியும். வெள்ளம் வரும், புயல் வரும், சென்னை மூழ்கிவிடும் என்று சமூக வலைத்தளங்களில் யாரும் வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
The Met department has said a deep depression in the Bay of Bengal bringing heavy rains in north coastal areas of the State and Puducherry.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X