வடசென்னையில் மழை வெளுத்து வாங்கும்... தென் சென்னைக்கு "லைட்"டா.. வெதர்மேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஊட்டியாக மாறிய சென்னை..எப்படி தெரியுமா?- வீடியோ

  சென்னை: வட சென்னை, மேற்கு சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்யும் ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் மிதமான அளவே மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

  வடகிழக்கு பருவமழை சில நாட்கள் இடைவெளி விட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. சென்னையின் வானிலை மீண்டும் மாறியுள்ளது.

  குளுமையான காற்று வீசுவதால் ஏசி போட்டது போல குளிர் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வானிலை, மழை நிலவரத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  மழைக்கு வாய்ப்பு

  மழைக்கு வாய்ப்பு

  இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வட சென்னை, மேற்கு சென்னை பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் லேசான மழை இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

  காவிரி டெல்டா மழை

  காவிரி டெல்டா மழை

  கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருவாரூரில் இன்று இரவுமுதல் நல்ல மழை பெய்யும். அந்தப் பகுதியில் காற்றின் போக்கு மழைக்கு சாதகமாக இருக்கிறது.

  மேகக்கூட்டங்கள்

  மேகக்கூட்டங்கள்

  சென்னையில் மீண்டும் மழை வெளுத்துவாங்க வரும் ஞாயிறுவரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், சென்னையில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்றால் வடகிழக்கு பகுதியில் காற்று குவிந்து மேகக்கூட்டங்கள் உருவாக வேண்டும்.

  பிரதீப் ஜான் பதிவு

  பிரதீப் ஜான் பதிவு

  இப்போது ஒரு மேகக்கூட்டம் உருவாகியிருக்கிறது ஆனால் அது சற்று தொலைவில் இருக்கிறது. அதேவேளையில் வடகிழக்குப் பகுதியில் உள்ள அந்த மேகக்கூட்டமானது நன்றாக முதிர்ந்திருப்பதால் சென்னையை நெருங்கும்போது அது வலுவிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் அதை கூர்ந்து கவனித்துவருவோம். அதில் மாற்றம் ஏதும் இருந்தால் சொல்கிறேன் என்று பிரதீப் ஜான் பதிவிட்டிருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  North and West Chennai is seeing good spell, overall drizzly, light rains in other parts of Chennai. Cuddalore, Nagai, Karikkal, Thiruvarur will be thick of action today and tomorrow.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற