4,500 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்.. மதுரை கோட்டம் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  சென்னை: 4500 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, 4,500 போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் உள்ள 16 கிளை மேலாளர்களுக்கு கோட்ட மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  Notice has sent to 4,500 transport employees in Madurai division

  கடந்த வியாழக்கிழமை இரவு முதலே போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கும் ஹைகோர்ட்டில் நிலுவையிலுள்ளது.

  வாராகி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்காமல் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்ய கூடாது என ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Notice has sent to 4,500 transport employees who engaged in the strike, says Madurai division manager. The High Court said that gvt should not dismiss empoloyees without notifying the explanation. In this situation, the notice has been sent to workers and has increased the tension.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற