அஸ்திவாரத்தை ஆரம்பித்து விட்டேன்... கட்சி பெயரை அறிவிக்க இது நேரமில்லை- கமல் #kh #maiamwhistle

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Kamal Speech about his political move-Oneindia Tamil

  சென்னை: தியாகராய நகரில் ஆப் அறிமுக விழாவில் பேசிய கமல், ஹேஸ்டேக் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சிக்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

  சினிமா தயாரிக்கவே 6 மாத காலம் முன்னேற்பாடுகள் செய்யவேண்டும், அரசியல் மிகப்பெரிய பணி என அதற்கு முன்னேற்பாடுகள் அவசியம். அதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டதாகவும் நடிகர் கமல் கூறியுள்ளார்.

  Now is not the time to announce a political party: #KamalHaasan

  கட்சியை தனியாக அறிவிக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ள கமல், முன்னேற்பாடுகள் சில செய்ய வேண்டியுள்ளது என்றார்.

  அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டியுள்ளது. மக்களின் வெற்றிக்காக இதை செய்ய வேண்டியுள்ளது
  எனக்கு பின்னும் இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்பதால் அறிஞர்களுடன் ஆய்வு செய்து வருகிறேன்

  கர்ப்பமாக இருப்பேன் என்று சொன்னதும் பிள்ளைக்கு பெயர் என்ன என்று கேட்காதீர்கள். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்துவிட்டு பெயர் சூட்டலாம்

  கட்சிக்கான ஆயத்தங்கள் செய்ய துவங்கி விட்டேன். அரசியல் மிகப்பெரிய பணி என்பதால் அதற்கான பலமான அஸ்திவாரம் அவசியம். நாம் என்ன செய்தாலும் அனைவரிடம் இருந்தும் விமர்சனம் வரவேண்டும் என்று கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actor Kamal Haasan launches mobile app in Chennai.It's time to vociferously tell what's going wrong with the government said Kamal haasan.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற