மறக்க முடியுமா 2015ம் ஆண்டு பிபிசி வெள்ள எச்சரிக்கையை.. வைரலாகும் பழைய டிவிட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பிபிசி வானிலை அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் அதே போல தாம்பரத்தில் ஒரு மணி நேரத்தில் மழை கொட்டித் தீர்த்தது.

'பிபிசி வெதர்' டிவிட்டர் தளத்தில் 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, அந்த டிவிட்டை வெளியிட்டது. அதன்பிறகு 24 மணி நேரத்திற்குள் சென்னையை மழை வெள்ளம் மூழ்கடித்தது.

செம்பரம்பாக்கத்தில 45.7 செ.மீ. மீனம்பாக்கத்தில் 39 செ.மீ. அளவிற்கு மழை அளவு பதிவானது. இதன்மூலம் பிபிசி வானிலை ஆய்வுமையத்தின் கணிப்பு பலித்தது.

துல்லியமான கணிப்பு

முதலில் சாதாரண கணிப்பு என கடந்து சென்றவர்களை வெள்ள பாதிப்பு திரும்பி பார்க்க வைத்துவிட்டது. அதிலிருந்து வானிலை கணிப்பில் பிபிசி வெதர் அறிவிப்புக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது.

மீட்பு பணிகள்

மீட்பு பணிகள்

உடனடியாக, சென்னை புறநகரில் 300 ராணுவ வீரர்கள்மீட்பு பணியி்ல் ஈடுபடுத்தப்பட்டனர். 50 மீன்பிடி படகுகளில் மீனவர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போன்ற 1000க்கும் மேற்பட்ட மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படகில் பயணித்த மக்கள்

படகில் பயணித்த மக்கள்

நாலாபுறம் மழை தண்ணீர் ஓடியதால் பால், தண்ணீர் இல்லாமல் பலர் தவித்தனர். வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வசிப்பவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியதாயிற்று. இதனால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க அவர்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தினர்.

மீண்டும் ஒரு எச்சரிக்கை

மீண்டும் ஒரு எச்சரிக்கை

இந்த நிலையில்தான், பிபிசி வானிலை அறிக்கையில், மீண்டும் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 500 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Old tweet dated 2015 by the BBC weather going viral in social media again as it warns about flood again.
Please Wait while comments are loading...