ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலையில் திடுக்கிடும் திருப்பம் - வீடியோ
முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலையில் கொலையான ஓம் பகதூரை, சக காவலாளியான கிருஷ்ண பகதூர் கொலை செய்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது.
கோத்தகிரி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலையில், கொலையான ஓம் பகதூரை, சக காவலாளியான கிருஷ்ண பகதூர் கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு காவலாளியாக பணியாற்றியவர்கள் தாக்கப்பட்டு, ஒம் பகதூர் என்ற காவலாளி உயிரிழந்தார்.

அவருடன் வேலை பார்த்து வந்த கிருஷ்ண பகதூர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை நடந்த இடத்துக்கு அருகே கிடந்த செல்போன்களையும் கையுறையையும் எடுத்து போலீசார் சோதித்துப் பார்த்தனர்.
அதில், ஓம் பகதூரை கிருஷ்ண பகதூர் கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ண பகதூரை கைது செய்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விசாரணையில் கொடநாடு கொலை சம்பவத்தில்தொடர்புடைய கும்பல் யாரென தெரிய வரும். மேலும் கொலைக்கான பின்னணி காரணங்களும் இந்த விசாரணையின் மூலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications