மமதையில் பறந்த ஊர்க்குருவிகளை தரைக்கிறக்கியவர் பெரியார் - நெட்டிசன்கள் புகழாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாளையொட்டி, சமூக வலைதளங்களில் #HBDPeriyar என ஹாஷ்டேக் உருவாக்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல தலைவர்கள் பெரியாரின் தேவையை உணர்த்தும் வகையில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டனர். பெரியாரின் பேரன்களாக உலாவரும் பல நெட்டிசன்கள், தங்கள் தலைவர் குறித்த பெருமையும் அன்பையும் அவரது பிறந்தநாளில் டுவிட்டரில் அளவில்லாத மகிழ்ச்சியில் கொட்டி வருகின்றனர்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்காக...

பகலவன் பெரியார்!

பிரகதீஷ் என்பவர், 94 வயதிலும் மூத்திரச் சட்டியோடு, தமிழனுக்கு சுய அறிவையும் சுரணையும் ஊட்ட பாடுபட்ட பகலவன் என பதிவு செய்துள்ளார்.

பெயருக்குப் பின்னால் கல்வித் தகுதி!

வேலைக்காரன் தன் டுவிட்டரில், பெயருக்குப் பின் சாதியை வைத்திருந்த சமூகத்தை, பெயருக்குப் பின் கல்வித்தகுதியை வைக்க காரணமானவர் பெரியார் என கூறியுள்ளார்.

ஊர்க்குருவிகளை தரைக்கு இறக்கியவர்

போக்கிரி, தன் டுவிட்டரில் உயர்ந்தவன் என்ற மமதையில் உயரப் பறந்த ஊர்க்குருவிகளை, சவுக்கடிகள் மூலம் தரைக்கு இறக்கியவர் பெரியார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறியாரை பெரியாராக்கியவர்!

மனதளவில் சிறியார்களை 'பெரியார்'களாக்கவே பெரியவர் ஒருவர் பாடுபட்டார். அவர் பெயரும் பெரியாரே என புகழ்ந்துள்ளார்.

அன்பின் வெளிப்பாடு

பாஸ்கர் என்பவர், யோவ் ராமசாமி கிழவா !! நானெல்லாம் படிக்கணும்தானே கஷ்டப்பட்ட, படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன் வந்து பாருய்யா!! I Love you 😍😍 #HBDPeriyar என அன்பு நிறைய பதிவிட்டுள்ளார்.

தலைநிமிர வைத்த வெண்தாடி வேந்தர்

தலைநிமிர வைத்த வெண்தாடி வேந்தர்

பாதுஷா என்பவரின் பதிவில், ஒடுங்கி நடந்தவர்களை தலை நிமிர்ந்து நடக்க வைத்த வெண்தாடி வேந்தர் பிறந்த தினம் என குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On the eve of Periyar's birthday, tweets overloading with lot of wishes and Periyar's teaching quotes
Please Wait while comments are loading...