கமல் முதல்வரானால் அறிக்கையை படித்து முடிப்பதற்குள் 5 வருஷம் போயிரும்.. வாசகர்கள் 'நச்'
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து நமது வாசகர்கள் பதிவிட்டுள்ள சில கருத்துகளை இங்கே பார்க்கலாம்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா, நடிகர் ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவாரா என்று நடக்கும் விவாதங்களுக்கு நமது வாசகர்கள் சில சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேன் என்ற சொல்லி வந்த நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் நடந்த ரசிகர்களுடனான சந்திப்பின் போது போருக்குத் தயாராக இருங்கள் என்று சொன்ன நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினிகாந்த் சில அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே தான் கூறியதாகக் கூறியிருந்த நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் வருகை போல ஒரு பதிவை போட்டிருந்தார். அதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்துவிட்டால் நான் முதல்வர் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி இது நிச்சயம் அரசியலுக்கான அஸ்த்திவாரம் தான் என்று பரபரப்பு கிளம்பியது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரில் யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்று வெளியாகியிருந்த செய்திக்கு நமது வாசகர்கள் பல சுவாரஸ்யமான கருத்துகளை கூறியிருந்தனர். அவற்றில் ஒரு வாசகர் அரசியலும் மெகா சீரியல் போல போய்க்கொண்டிருக்கிறது என்று கலாய்த்துள்ளார். "என்னடா இது அரசியலும் ஒரு மெகா தொடர் சீரியல் மாரி போகுது !!"
அதே சமயம் கமல் வெளியிட்ட டுவிட்டர் பதிவை வைத்தும் சிலர் கருத்து கூறியுள்ளனர். அதில்"கமல் முதல்வர் ஆகிட்டா அவர் அறிக்கை ஒண்ணுமே புரியாதே....அதை புரிஞ்சிக்குறதுக்குள்ள 5 வருஷம் ஓடிடுமே..." என்று குறிப்பட்டுள்ளார். மற்றொரு வாசகர் "புரிய கூடாது னு சொல்ல வரல... புரிந்தால் நல்லதுனு தான் சொல்ல வரேன்" என்று தனது பதிலை தெரிவித்துள்ளர்.
"இதுவரை பொது மக்கள் பிரச்சனைகளுக்கு, அது கதிராமங்கலம் ஆகட்டும், நெடுவாசல் ஆகட்டும், கமல் எங்கே வந்து போராடினார்....." என்று கேட்கிறார் ஒன்இந்தியா வாசகர். "ரஜினி கமல் ரெண்டு பெரும் சீமான் வைக்கும் தமிழ் டெஸ்ட்ல பாஸ் பண்ணனும் அப்புறம்தான் அவர்கள் முதல்வர் பதவியப்பத்தி யோசிக்க முடியும்" என்று டெஸ்ட் வைக்கச் சொல்கிறார் மற்றொருவர்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications