For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் ஒழிப்பு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?- ஒன் இந்தியாவின் மாபெரும் சர்வே முடிவுகள் இதோ..

ரூபாய் ஒழிப்பு குறித்த ஒன் இந்தியாவின் மாபெரும் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாத விவகாரம் தொடர்பாக நமது ஒன் இந்தியா நடத்திய மாபெரும் சர்வே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பொதுவாக சாமானியர்கள் சந்திக்கும் தற்போதைய பிரச்சனைக்கு அரசையே பெரும்பான்மையோர் குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும் பல்வேறு நடவடிக்கைகளில் அரசுக்கு ஆதரவாகவும் வாக்குகள் கிடைத்துள்ளன.

நமது ஒன் இந்தியா இணையதளம் ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரச்சனையை முன்வைத்து ஒரு மெகா சர்வேயை நடத்தியது. இதில் மொத்தம் 11 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 11 கேள்விகளுக்கும் கிடைத்த பதில்களும் வாக்குகளும் விரிவாக.

அரசுக்கு ஆதரவா?

அரசுக்கு ஆதரவா?

ரூபாய் ஒழிப்பில் அரசின் நடவடிக்கையை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு

ஆம் - 71.7%

இல்லை- 25.7%

கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை 2.8%

பப்ளிசிட்டியா?

பப்ளிசிட்டியா?

அரசின் முடிவை பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஆக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு

ஆம். மக்களின் வாழ்க்கையை இது சிரமப்படுத்தி விட்டது- 34.3%

இல்லை, நீண்ட கால அடிப்படையில் இது நல்லது. பொறுமை காக்க வேண்டும்.- 65.7%

ரூ2,000 நோட்டு...

ரூ2,000 நோட்டு...

கறுப்புப் பணத்தை ஒழிக்க 1000 ரூபாய் நோட்டை ஒழித்தார்கள். 2000 ரூபாய் நோட்டால் அது பாழாகுமே? என்ற கேள்விக்கு

ஆம், இது அறிவுப்பூர்வமான முடிவல்ல. 2000 ரூபாய் நோட்டு கறுப்புப் பண முதலைகளுக்கே சாதகமாகும்- 51.7%

இல்லை, இதில் கறுப்பு பணம் வெளிவர நாட்கள் பிடிக்கும்- 48.3%

தயாராகவில்லையா?

தயாராகவில்லையா?


அரசு முன் கூட்டியே தயாராகவில்லையா, மேலும் கூடுதல் ரூபாய் நோட்டுக்கள் தயாராக இருந்திருக்க வேண்டுமா? என்ற கேள்விக்கு

ஆம், அரசு ஆயத்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.. புதிய ரூபாய் நோட்டுக்கள் முன்கூட்டியே அச்சடித்திருக்க வேண்டும்- 59.3 %

இல்லை, இதுபோன்ற விஷயங்களில் இதுதான் ஒரே வழி- 40.7%

ரகசியம் காக்கவா?

ரகசியம் காக்கவா?

ரகசியத்தைக் காக்க அரசு இந்த அமலாக்கத்தை நிதானமாக செய்ததாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு

தனது செயலை நியாயப்படுத்த அரசு கூறும் சப்பைக் கட்டு இது- 35.8%

இதைத் தவிர வேறு வழியில்லை. ரகசியத்தைக் காப்பதுதான் முக்கியமானது -64.2%

உதவியதா?

உதவியதா?

சாமானிய மக்களுக்கு இந்த ரூபாய் ஒழிப்பு எந்த வகையில் உதவியுள்ளது? என்ற கேள்விக்கு

சாமானியர்களுக்து இது உதவவில்லை. வங்கிகளில் நீண்ட வரிசைதான் உள்ளது- 40.7%

நீண்ட கால அடிப்படையில் இது மக்களுக்கு உதவிகரமாகவே இருக்கும்- 59.3%

ஒழிந்துவிட்டதா?

ஒழிந்துவிட்டதா?

கறுப்புப் பணம் முழுமையாக ஒழிந்து விட்டதா? என்ற கேள்விக்கு

2000 ரூபாய் நோட்டின் அறிமுகத்தால் கறுப்புப் பணம் அதிகரிக்கவே செய்யும்- 45.7%

ஆம், அந்த நோக்கத்தில் இது முக்கிய நடவடிக்கையாகும்- 54.3%

வாபஸ் பெறனுமா?

வாபஸ் பெறனுமா?

அரசு தோல்வியடைந்து விட்டதாக கருதுகிறீர்களா.. இதை வாபஸ் பெற வேண்டுமா? என்ற கேள்விக்கு

ஆம், மக்கள் கஷ்டப்படுகிறார்கள்- 29.6%

இல்லை, முடிவு சரிதான்,தொடர வேண்டும்- 70.4%

யார் காரணம்?

யார் காரணம்?

சாமானியர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைக்கு யாரைக் காரணம் கூறுவீர்கள்? என்ற கேள்விக்கு

அரசு - 50.1%

வங்கிகள்- 20.1%

ரிசர்வ் வங்கி- 29.8%

நிலைமை சரியாகுமா?

நிலைமை சரியாகுமா?

டிசம்பருக்குள் நிலைமை சரியாகும் என்று மோடி கூறுவதை நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு

இல்லை, நான் அவரை நம்பவில்லை. அவர் காலம் கடத்துகிறார்- 36%

ஆம், நிச்சயம் மேம்படும்- 64%

தேர்தல் தாக்கம்?

தேர்தல் தாக்கம்?

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு

அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக தோல்வி அடையும்-20.3%

பாஜகவுக்கு லாபம் கிடைக்கும்- 42.8%

மக்களுக்கு ஞாபக மறதி அதிகம். இது பெரிய பிரச்சினையாகவே இருக்காது-36.9%

இவ்வாறு பதிலளித்துள்ளனர்.

English summary
Here the Oneindia's deatail survery results on Centre's Demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X