For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சி பரவாயில்லை 32%.. படு மோசம் 31%.. திமுக மீது அதிருப்தி- ஒன்இந்தியா தமிழ் வாசகர் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்இந்தியா -தமிழ் நடத்திய கருத்துக் கணிப்பில், அதிமுக ஆட்சி பரவாயில்லை என்று 32 சதவீதம் பேரும், படு மோசம் என்று 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களிடையே திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் முழுமையான திருப்தி யாருக்குமே இல்லை என்று தெரிய வருகிறது.

ஆளுங்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது ஒரு கேள்வி. திமுக சட்டசபையில் எப்படி செய்படுகிறது என்பது இன்னொரு கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு நமது வாசகர்கள் அளித்துள்ள தீர்ப்பைப் பார்ப்போம்.

திமுக நடவடிக்கை சூப்பர்

திமுக நடவடிக்கை சூப்பர்

திமுக சட்டசபையில் சூப்பராக செயல்படுகிறது என்று 25 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுமார்

சுமார்

திமுகவின் நடவடிக்கை சுமார் என்று கூறியிருப்போர் எண்ணிக்கை 9 சதவீதமாகும்.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

திமுகவின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று 30 சதவீதம் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த. பதிலுக்குத்தான் அதிக அளவிலானோர் வாக்களித்துள்ளனர்.

தேமுதிகவை விட பரவாயில்லையே

தேமுதிகவை விட பரவாயில்லையே

முந்தைய எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கு திமுக எவ்வளவோ தேவலாம் என்று கருத்துத் தெரிவித்திருப்போர் எண்ணிக்கை 22 சதவீதம் ஆகும்.

இன்னும் கொஞ்சம் டைம் தருவோம்

இன்னும் கொஞ்சம் டைம் தருவோம்

திமுக சிறப்பாக செயல்பட இன்னும் அவகாசம் தேவை என்று கருத்து தெரிவித்திருப்போர் 14 சதவீதமாகும்.

அதிமுகவின் செயல்பாடு பிரமாதம்

அதிமுகவின் செயல்பாடு பிரமாதம்

ஆளுங்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு பிரமாதமாக உள்ளதாக 10 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நல்லாருக்கு

நல்லாருக்கு

ஜஸ்ட் நல்லாருக்கு என்று கருத்து தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை 9 சதவீதமாகும்.

பரவாயில்லை

பரவாயில்லை

பரவாயில்லை என்று கூறியிருப்போர்தான் அதிகம். அதாவது 32 சதவீதம் பேர் அதிமுக ஆட்சி பரவாயில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

மோசம்

மோசம்

அதிமுக ஆட்சி மோசம் என்று கருத்துக் கூறியிருப்போர் எண்ணிக்கை 19 சதவீதமாகும். இவர்களுக்கு அதிமுக ஆட்சி அதிருப்தியைக் கொடுத்துள்ளது.

படு மோசம்

படு மோசம்

படு மோசம் என்று கோபமாக கருத்து தெரிவித்திருப்போர் எண்ணிக்கை 31 சதவீதமாகும். இவர்கள் அதிமுக ஆட்சி மீது மிகக் கடுமையான கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

பாசமும் - கோபமும் பாதிப் பாதி

பாசமும் - கோபமும் பாதிப் பாதி

அதிமுக ஆட்சி மீது திருப்தியுடன் இருப்போரும், அதிருப்தியுடன் இருப்போரும் கிட்டத்தட்ட பாதிப் பாதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Oneindia Tamil readers have given a mixed opinion on the performance of the ADMK govt and the main opposition party DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X