இதை விட கேவலமான ஆட்சியைப் பார்த்ததே இல்லை.. ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் அதிரடி!
சென்னை: அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி மக்களிடம் மிகக் கடுமையான அதிருப்தியைச் சந்தித்துள்ளது என்பது நாம் நடத்திய ஒரு சிறு கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி சரியில்லை என்று நமது வாசகர்கள் அடித்துக் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா தலைமையில் 2வது முறையாக கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியைப் பிடித்தது. கடந்த ஆண்டு இதே மே 23ம் தேதிதான் (அதாவது இன்றுதான்) அதிமுக ஆட்சியமைத்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால் 2வது முறையாக அதிமுக ஆட்சியமைத்த பிறகு எதுவுமே உருப்படியாக நடக்கவில்லை. குறிப்பாக ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டது முதலே தமிழகத்தின் தலைவிதியை சனியன் பிடித்து ஆட்டத் தொடங்கி விட்டது இன்று வரலாறு காணாத அவலத்தில் மக்கள் உள்ளனர்.

அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி?
இந்த நிலையில் இன்று அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி நிறைவு குறித்து நமது வாசகர்களிடம் கருத்துக் கேட்டிருந்தோம். அதில் ஆட்சிக்கு எதிராகவே மக்களின் மன நிலைமை உள்ளது புரிய வந்தது.

வேதனை வேதனை வேதனை
அதிமுகவின் ஓராண்டு கால ஆட்சி குறித்து வேதனை வேதனை வேதனை என்று தெரிவித்துள்ளோர் எண்ணிக்கை 19.68 சதவீதமாகும்.

நல்லாட்சி நடக்குது
இந்த ஆட்சியையும் நல்லாட்சி என்று சொல்லவும் சில பேர் உள்ளதும் தெரிய வந்துள்ளது. அதாவது பதிவான வாக்குகளில் 1.26 சதவீத வாக்குகள் நல்லாட்சி நடப்பதாக கூறியுள்ளன.

இதை விட கேவலமான ஆட்சியைப் பார்த்ததே இல்லை
இதுதான் அதிகபட்சமாக பதிவான வாக்குகள். இதை விட கேவலமான ஆட்சியைப் பார்த்ததே இல்லை என்று 41.82 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது
ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது என்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை 1.37 சதவீதமாகும். அதாவது 170 ஓட்டுக்கள்.

யாருக்குமே நலம் பயக்காத அரசு
இந்த அதிமுக அரசு யாருக்குமே நலம் பயக்காத அரசு என்பது 4.92 சதவீத வாக்குகளின் தீர்ப்பாகும். அதாவது 608 வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி கட்டுப்பாட்டில் இருக்கும் வரை விளங்காது
டெல்லி கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இந்த அரசு செயல்பட முடியாது, எதுவுமே சரிப்பட்டு வராது என்பது 7.54 சதவீதம் பேரின் கருத்து. அதாவது 932 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

ஜெயலலிதா இல்லாததால் தடுமாறுகிறார்கள்
ஜெயலலிதா என்ற தலைமை இல்லாததால் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது அதிமுக என்பதுதான் 2வது அதிக வாக்குகளைப் பெற்ற ஆப்ஷனாகும். அதாவது 23.42 சதவீதம் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications