For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தந்தையை கொண்டாடிய 'தட்ஸ்தமிழ்' வாசகர்கள்.. பேஸ்புக்கை உருக்கிய கமெண்டுகள்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தந்தை.. அன்பை தனக்குள் ஒளித்து வைத்து, கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு.

அப்பா.. அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு.

இப்படி, தந்தையை பற்றி அதிகம் சொல்லிக்கொண்டு போகலாம். அமெரிக்காவில் ஆரம்பித்த தந்தையர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. தாய் பாசம் வெளியே தெரிந்துவிடும், கொண்டாட கூட தேவையில்லை.

தந்தை என்பவர் அப்படியல்ல. உதிரத்தை வியர்வையாக்கி பிள்ளைகளை உயரத்துக்கு கொண்டு செல்ல வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு ஜீவன். ஆனால் ஆர்ப்பாட்டமோ, விளம்பரமோ இல்லாமலே. அப்படிப்பட்ட ஒரு உறவுக்கு மரியாதை செய்ய நாள் அவசியப்படுகிறது. அதுவே இந்நாள், உலக தந்தையர் தின பொன் நாள்.

இதை கருத்தில் வைத்துதான் 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக் தளம் தந்தை குறித்த அனுபவங்களை பகிருமாறு வாசகர்களை கேட்டுக்கொண்டது. பெண் பிள்ளைகளுக்கு ஈடாக, ஆண் பிள்ளைகளும், தந்தை மீதான பாசத்தை பகிர்ந்திருந்தது, நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.

பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட பாசமிகு உறவுகளின் உள்ளப்பூர்வ வார்த்தைகளை இங்கு வடிக்கிறோம் நீங்களும் படியுங்கள். இல்லை உணருங்கள்.

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை,உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது "அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்"

Posted by Oneindia Tamil on Saturday, June 20, 2015

Anand Tamizh: மகள்கள் மட்டுமில்லை தன் மகன்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தந்தைமார்களும் தன் உதிரத்தை வியர்வையாய் சிந்துகிறார்கள்.... அவர்கள் நம் காண முடிந்த கடவுள்கள்..... இவ்வாறு ஆனந்த் தமிழ் எழுதிய கமெண்டுக்கு ஏகப்பட்ட லைக்குகள்.

Ponnusamige Ponnusamige: அப்பா நமக்கு சொன்னதெல்லாம் சரி என்று நினைக்கும் நேரத்தில் நீ சொல்வதெல்லாம் தவறு என்று சொல்ல மகன் பிறந்து விடுகிறான். எங்கேயோ படித்தது....

Lakshmi Kumari: கொஞ்சும் போது மீசை குத்தும் என்பதர்காக மீசையை மழித்த அப்பாக்கள் ஏராளம்.

Anbu Kumar: அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால்..

Vel Raj: அப்பா அடித்த அடி அன்று வலித்தாலும்..இன்று இனிக்கிறது...நல்ல பையனென்று நாலுபேர் சொல்லும் பொழுது...

Evelin Ann Starr: என் திருமண விழாக்கு கூட நீங்க வரல! திருமண மண்டபத்துல எல்லாரும் அப்பா எங்க கேக்கும் போது நா சொல்ல முடியாம அழுதேன்.. ஒரு பொண்ணு அப்பா அம்மாக்கு செய்ற, பாத பூஜை கூட என்னால செய்ய முடியல. அப்பா அம்மா இருந்தும் நா அக்காக்கும், மாமாக்கும் பூஜை செய்தேன். என் அம்மா ஏதும் பேச முடியாம ஓரதுல நின்னு அழுதாங்க.. நீங்க எங்க இருக்கீங்க அப்பா ப்லீஸ் சொல்லுங்க..நாங்க வந்து கூப்பிட்டு போறோம்.. எங்களுக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்.

Shunmuga Sundaram: இன்று தந்தையர் தினமாம். பிறந்தது முதல் வெளியே சுமந்ததால் பாதி அன்னை எனலாமா....?
சமூகத்திலும்., இல்லத்திலும்., பலர் உள்ளத்திலும் வாழ கற்றுதந்ததால் ஆசான் எனலாமா...? நொறுங்கி அமர்ந்த வேளையில் "விடுப்பா"என கூறிய நண்பன் எனலாமா...? எனது சுக நிமிடங்களுக்காக தன சுக நாட்களை விட்டுத்தந்த வேளையில் தியாகி எனலாமா... வார்த்தைகள் இல்லை....வணங்கும் அளவு எனக்கு மிக தொலைவில் வாழாததால் (நானாகவே மாறி வாழ்ந்த்ததால்) உம்மோடும்.. உம் நினைவோடும், உமை வாழ்வியல் பாடமாய் கொண்டு நன்றி கூறியே இன்றும் தினங்களை தொடங்குகிறேன்... நன்றி...நன்றி.

DrRam Ramamoorty: நான்நிமிர்ந்து நடந்திருக்க நீஎனக்குத் துணையானாய். நான்விழுந்தால் பிடித்தெழுப்பி நடக்க விட்டாய் என்குறைகள் தவிர்த்துவிட நல்லவழி நான்நடக்க மன்பதையில் என்னுயிர்நீ எந்நாளும் உதவிசெய்தாய்.

Bala Subramanian: தந்தை இருக்கும் வரை உனரவில்லை அருமையை இல்லாமல் ஆன பின்பு துடிக்கிறது மனது.

Selva Krishnan: உன்னுடன் வாழ நினைத்த வாழ்க்கையை என் மகன் (மகள்) உடன் வாழ வேண்டும் அப்பா

Mari Thee Boss: அன்னையும் பிதாவும் நம் உயிர் தெய்வம் ஆபத்தில் கடவுளே கடவுளே என்று வேண்டாதே நீ கூப்பிட்டால் உதவாது உன் அப்பாவையும் அம்மாவையும் உன் மனதார நினைத்து வேண்டிக்கொள் துன்பமும் துயரமும் துர விலகும் - விவேகானந்தர்.

இவ்வாறு பல வாசகர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆங்கிலத்திலும் தங்கள் அன்பையும், ஆதங்கத்தை வெளிக்காட்டியுள்ளனர்.

English summary
Oneindiatamil readers express their feeling by commenting on father's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X