விரைவில் அறிமுகம்.. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் பெட்ரோல், டீசல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், வீட்டிற்கே பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யப்படும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரப்போகிறதாம்.

கடந்த ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Online petrol diesel sale coming in India

இதுக்குறித்து ஐ.ஓ.சி. தலைவர் சஞ்சீவ் சிங் கூறுகையில், மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் ஹோம் டெலிவரி திட்டம் வரவேற்கதக்கது. இருப்பினும் இதற்கான ஆய்வுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும். நாங்கள், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் விமானம் மூலம் டீசலை டெலிவரி செய்யும் திட்டத்தை சோதனை செய்து வருகிறோம். ஐ.ஓ.சி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய 2 நிறுவனத்திற்கு மட்டும் தற்போது இதற்கான உரிமம் உள்ளது.

வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, கூடிய விரைவில், திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது வரை இந்த சோதனையை செய்யும் இடங்களை நாங்கள் தேர்வு செய்யவில்லை என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The union government is planning to put all petroleum products on the e-commerce platform.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற