தினகரன் ஆதரவாளர்கள் 164 பேர் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுகவில் இருந்து 100க்கும் அதிகமான தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம்- வீடியோ

  சென்னை: அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 100 பேர் ஒரே நாளில் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டனர்.

  ஆர்.கே நகர் தேர்தல் முடிவிற்கு பின் அதிமுக கட்சியில் இருந்து தொடர்ந்து பலர் நீக்கப்பட்டு வருகிறார்கள். நிறைய மாவட்ட நிர்வாகிகளின் பொறுப்புகளும் மாற்றப்பட்டு வருகிறது.

  OPS-EPS removes more than 100 ADMK members

  இந்த நிலையில் தற்போது 100க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் மாவட்ட நிர்வாகி பதவியும் பறிக்கப்பட்டு இருக்கிறது.

  இதுவரை மட்டும் அதிமுகவில் இருந்து தருமபுரி. திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்164 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்பட்டு இருக்கிறது.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி உள்ளிட்ட முக்கிய நபர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  மேலும் இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது. அப்படி தொடர்பு வைத்துக் கொண்டால் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளனர்,

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  More than 100 ADMK members have been removed by OPS and EPS. They have been removed for acting against ADMK rules.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற