13 ஆண்டுகள் கழித்து முதல்வரான ஓ.பன்னீர் செல்வம்.. தமிழகத்தின் 13வது முதல்வர்!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக, 2வது முறையாக, 13 ஆண்டுகள் கழித்து பதவியேற்கவுள்ள ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தின் 13வது முதல்வர் ஆவார். அதாவது தமிழ்நாடு என்ற பெயருக்கு சென்னை மாகாணம் மாறிய பின்னர், பதவியேற்கவுள்ள 13வது முதல்வர் ஆவார்.
மேலும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 2வது முறையாக முதல்ராவதும் இதுவே முதல் முறையாகும்.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெயரும் பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு
1969ம் ஆண்டு தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்தின் பெயர் மாற்றப்பட்டது. அது முதல் இதுவரை தமிழகத்தில் 12 முதல்வர்கள் இருந்துள்ளனர்.

கருணாநிதி லீடிங்
திமுக தலைவர் கருணாநிதிதான் தமிழகத்தின் முதல்வராக அதிக முறை இருந்தவர். அவர் இதுவரை 5 முறை முதல்வராக இருந்துள்ளார்.

2வது இடத்தில் ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இதுவரை 3 முறை முதல்வராக இருந்துள்ளார். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர்
அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர். 2 முறை முதல்வராக இருந்துள்ளார்.

23 நாட்களுக்கு மட்டும் வி.என்.ஜானகி
வி.என்.ஜானகி 23 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்துள்ளார். தனது கணவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் இவரை அதிமுக ஜானகி அணியினர் முதல்வர் பதவியில் அமர்த்தினர்.

2 முறை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் 2வது முறையாக முதல்வராகியுள்ளார்.

தேனியிலிருந்து 2வது முதல்வர்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமருவது இது 2வது முறையாகும்.

காமராஜருக்கு அடுத்து
மேலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமரும் 2வது நபர் ஓ.பன்னீர் செல்வம். இதற்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் அந்த பெருமையை வைத்திருந்தார். ஆனால் காமராஜர் 3 முறை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

13வது முதல்வராக.. 13 ஆண்டுகள் கழித்து
தமிழ்நாட்டின் 13 வது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்கவுள்ளார். அதுவும் 13 ஆண்டுகள் கழித்து என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications