முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் வருத்தமா?- நிருபர் கேள்விக்கு ஓ.பி.எஸ் சொன்ன அடடே பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பொன்னாருக்கு ஓபிஎஸ் பொளேர் பதில் | Oneindia Tamil

  சென்னை: முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓராண்டு ஆன நிலையில் வருத்தம் உள்ளதா என்று துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எதை கொண்டு வந்தோம் இழப்பதற்கு என்று சாதுர்யமாக பதிலளித்தார்.

  சட்டசபையில் ஜெயலலிதா படம் திறந்தது போல் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெ. படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சென்னை அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கினர்.

  OPS says about his resignation from CM post

  அப்போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து பேரவை கூட்டத்தில் ஆலோசித்தோம்.

  அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.

  தினகரன் உட்பட எதிர்க்கட்சியினரால் அதிமுகவுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. திமுக ஆட்சிக்காலத்தில் தான் போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை அதிகமானது. போக்குவரகத்து து றை நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க திமுக சார்பில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை அவர்கள் ஆட்சி காலத்தில் செயல்படுத்தாதது ஏன்? என்றார்.

  முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற செய்தியாளர்கள் ஓபிஎஸ்ஸுடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு" என பதில் கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Reporters asks O.Panneer Selvam about his resignation from the CM post. He replies that by quoting Krishna's Geetha Saaram.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற