For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விறகுவெட்டியும் ஓ.பி.எஸ்ஸும்!

By Shankar
Google Oneindia Tamil News

ஒரு நாள் விறகுவெட்டி ஒருவன் காட்டிற்குள் மரம் வெட்டிக்கொண்டிருந்த பொழுது அவனது கோடாரி தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது.

பிழைப்பிற்கு இருந்த ஒரு கோடாரியும் ஆற்றில் விழுந்ததால் அழுது புலம்பிக்கொண்டிருந்தான் விறகு வெட்டி. அப்பொழுது ஒரு தேவதை தோன்றி விஷயத்தை கேட்டறிந்த பின்னர் ஆற்றுக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடாரியை எடுத்து வந்து காண்பித்து "இதுவா உன்னுடைய கோடாரி?" என்றதாம்

விறகு வெட்டி இல்லை என்றான்.

OPS, the truthful woodcutter

மறுமுறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாரியை எடுத்துவந்து, "இதுவா உன்னுடைய கோடாரி?" என்றது.

அப்பொழுதும் இல்லை என்றான் விறகு வெட்டி.

மறுமுறை மூழ்கி ஒரு இரும்புக் கோடாரியை எடுத்து வந்து காண்பிக்க மகிழ்ச்சியுடன் "ஆமாம்" என்றான்.

விறகு வெட்டியின் நேர்மையைப் பாராட்டி மூன்று கோடாரிகளையும் அவனுக்கே அளித்தது அந்த தேவதை. இது நமக்குத் தெரிந்த கதை.

இப்பொழுது அதே விறகு வெட்டி கதையில் நம்ம முதல்வர் ஓபிஎஸ்ஸை பொருத்திப் பார்ப்போம்.

அதிமுகங்குற ஆத்து ஓரமா அழுதுகிட்டு இருந்தாரு ஓபிஎஸ். இதப்பாத்த சுப்ரீம் கோர்ட்ங்குற தேவதை, 2001 ல ஜெயலலிதாவ முதல்வர் பதவியிலருந்து இறக்கிட்டு முதல்வர் பதவியை எடுத்து வந்து ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சி. அத ஆறு மாசம் திருப்பித் திருப்பி பாத்துட்டு இது என்னோடது இல்லைன்னுசொல்லி திரும்ப குடுத்துட்டாரு ஓபிஎஸ்.

திரும்ப 2015 ல குன்காங்குற தேவதை மறுபடியும் முதல்வர் பதவிய எடுத்து வந்து ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சி. அதயும் 8 மாசம் எதுவுமே செய்யாம திருப்பித் திருப்பி பாத்துட்டு, இது என்னோடது இல்லைனு திருப்பிக் குடுத்துட்டாரு.

திரும்ப அப்பல்லோ ரெட்டி மற்றும் சசிகலாங்குற இரண்டு தேவதைகள் 2016ல மறுபடியும் முதல்வர் பதவியை எடுத்துட்டு போய் ஓபிஎஸ்கிட்ட குடுத்துச்சிங்க. அதயும் ரெண்டு மாசம் வச்சிருந்துட்டு திரும்பக் குடுத்துட்டாரு.

கடைசில சுப்ரீம் கோர்ட்டுல உள்ள இரண்டு பெரிய தேவதைகள் ஓபிஎஸ்ஸோட நேர்மையப் பாராட்டி மிச்சம் இருக்க நாலு வருஷ முதல்வர் பதவி காலத்தையும் அவருக்கே குடுத்துட்டாங்க!

- முத்து சிவா

English summary
Finally O Panneer Selvam is getting a chance to rule the state as CM for the remaining 4 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X