• search

பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் 200 கிலோ ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு - முத்தையா ஸ்தபதி கைது

By Mayura Akhilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   முறைகேடால் பூஜை செய்யாமல் பூட்டி வைக்கப்பட்ட பழனி முருகன் சிலை- வீடியோ

   திருச்சி: பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

   காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க சிலை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் பிரபல சிலை செய்யும் நிபுணர் முத்தையா ஸ்தபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் பழனி கோவில் சிலை முறைகேட்டு புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார் முத்தையா ஸ்தபதி.

   Palani Bala Dhandayuthapani Temple idol Scam: Muthiah Sthapati Arrests by police

   பழனியில் சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்ட நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த சிலையில் இருந்து நவபாஷானத்தை சுரண்டி எடுத்து ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இதனால் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு ஒரு அறையில் அச்சிலையை பாதுகாப்பாக வைத்து, அதற்கு பதிலாக 200 கிலோ எடைகொண்ட தங்கம் உள்பட 4 உலோகங்களான புதிய ஐம்பொன் சிலை ஒன்றை செய்து, மூலஸ்தானத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

   கடந்த 2004 ஆண்டில் இருந்து இந்த புதிய சிலையை வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் இந்த நோக்கத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. மிகவும் அரிய நவபாஷான சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது இத்திட்டத்தின் உள்நோக்கம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய புகார்கள் வந்தன.

   இதுபற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.ஏற்கெனவே தொன்மையான மூலவர் இருக்கும் நிலையில், பழையசிலை அகற்றப்பப்படக் கூடாது என இந்திய தொன்மைச் சட்டத்தில் உள்ள போதும், மேலும் ஒரு சிலையை செய்ய முயன்றதாக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் இறந்துவிட்டார்.

   இந்த நிலையில் விதிகளை மீறி 2004ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டது.
   சிலையை கோயிலிலேயே செய்ய வேண்டும் என்ற ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனது.

   இதனால் கோயிலின் இருட்டறையில், பூஜையே செய்யாமல் தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
   அந்த சிலையை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர், ஐஐடி தொழில்நுட்ப நிபுணர் குழுவிடம் அளித்து அதனைப் பரிசோதித்தனர். அதில் கிட்டத்தட்ட 10 சதவீதம் தங்கம் இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.

   ஐப்பொன்னில் 4 உலோகங்கள் மட்டுமே இருந்தன. திருத்தணி கோயிலில் இருந்து பெறப்பட்ட 10 கிலோவுக்கு பதில் கூடுதலாக 12 கிலோ என மொத்தம் 22 கிலோ தங்கம் அச்சிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

   சிலை செய்ய வெளியில் இருந்து யாரிடமும் தங்கம் வாங்கவே கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், கூடுலாக உள்ளதாகக் கூறப்படும் 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? வெளிநாடு வாழ் தமிழர்கள் அல்லது பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்றது. பயன்படுத்தாமலிருக்கும் உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், அத்தொகை முழுவதும் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

   சிலை செய்ததில் சேதாரமான 4.2 கிலோ தங்கமும் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் சூழலில் குற்றம் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முறைகேட்டினை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார் ஐ.ஜி பொன். மாணிக்கவேல்.

   இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவ முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

   இந்த முறைகேடு நடந்தபோது பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

   பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   English summary
   Muthiah Sthapati Arrestes Palani Bala Dhandayuthapani Temple Staue Scam Complaint. The Idol Wing police arrested the chief ‘sthapathi’ of the Hindu Religious and Charitable Endowments department and a former member of the Tamil Nadu Public Services Commission (TNPSC) on Sunday on charges of manipulating the casting of an important idol to replace the ‘navabhasana’ presiding deity at the Dhandayuthapani Swami temple in 2004.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more