குஜராத் தேர்தல் வருதுல்ல... பயத்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும் - ப.சிதம்பரம் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜிஎஸ்டி 28% வரிவிதிப்பில் இருந்து 173 பொருட்களுக்கு விலக்கு- அதிரடி முடிவு- வீடியோ

  சென்னை: குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருவதால் வேறு வழியின்றி எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

  ஜிஎஸ்டி வரியில் மிகப்பெரிய அளவில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இது குறித்து இன்று காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப. சிதம்பரம்.

   Panic-Stricken' Centre Will Change GST Rates, Says P Chidambaram

  ஜிஎஸ்டி வரி விதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. ஜிஎஸ்டி வரியை மிக மோசமான முறையில் அமல்படுத்தி, மத்திய அரசு பல தரப்பினரையும் பாதிக்கச் செய்து விட்டது.

  இதுபற்றி சுட்டிக்காட்டிய போதும் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது. மக்கள் கோபம் அதிகரிப்பதாலும் எதிர்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருவதாலும், குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது.

  ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்கள் மன்றத்திலும், ஜிஎஸ்டி கவுன்சிலிலும் விவாதிப்பதை மத்திய அரசால் தடுக்க முடியாது. நாட்டில் மிகப்பெரிய அளவில் வரி சீர்த்திருத்தம் செய்யும் வாய்ப்பு பறிபோய் இருக்கிறது. மோசமான குழுப்பத்திற்கு ஜிஎஸ்டி வரி காரணமாகியுள்ளது என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

  ஆக்ரா, சூரத், திருப்பூர் என பல நகரங்களிலும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வர்த்தக்களையும், மக்களையும் அவதிக்குள்ளாக்குவதை விடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன் வர வேண்டும் என்று ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருந்தார்.

  இதனிடையே குவஹாத்தியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 173 பொருட்கள் மீதான வரிவிகிதம் மாற்றியமைக்கப்பட உள்ளது. இனி ஆடம்பர பொருட்களாக கருதப்படும் 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவிகித வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  ஜவளிகள் மீதான வரி 18 சதவீத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது, ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுதும் ரத்து ஆகியவை முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Modi government will be forced to heed the advice of the opposition on GST due to the Gujarat assembly elections next month

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற