For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரமக்குடியில் மர்மத்தீ – திடீரென்று எரியும் பொருட்களால் மக்கள் பீதி!

Google Oneindia Tamil News

பரமக்குடி: பரமக்குடி அருகே மேலாய்குடி கிராமத்தில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில், 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 6 நாட்களுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் வீடுகளில் உள்ள துணிகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். ஆனால், தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

தானாகவே எரிந்த பொருட்கள்:

மறுநாள் அருகிலுள்ள மேலும் 2 பேரின் வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் சேர்கள், துணிகள் தீப்பற்றி எரிந்தன. மேலும், அருகே இருந்த மற்ற பொருட்களும் தானாகவே பற்றி எரிந்தன. இதனால் இந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறியபடி வெளியே ஓடி வந்தனர்.

காரணமில்லாமல் தீ:

தொடர்ந்து ஒருசிலரின் வீட்டு கூரையும் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு மின்கசிவு உள்ளிட்ட எந்த காரணங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தீப்பற்றியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சிறப்பு பூஜைகள்:

இதை தொடர்ந்து கிராமத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை செய்யப்பட்ட வேப்ப இலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சொருகி வைத்துள்ளனர். இருப்பினும் நேற்று முன்தினமும் சில வீடுகளில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.

நிம்மதியில்லாத மக்கள்:

இதனால் கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமலும், நிம்மதியாக இரவில் தூங்க முடியாமலும் அவதியடைந்து வருகின்றனர். பரமக்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மேலாய்குடி கிராமத்தில் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை:

பாஸ்பரசை பொருட்கள் மீது போட்டால் தீப்பற்றும் என்பதால், எரிந்த துணிகளை சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் கிராமத்திற்கு வந்து செல்லும் சாமியார்கள், குறி சொல்வோர், குடுகுடுப்பைகாரர்கள் என பலரையும் பிடித்து விசாரித்தனர்.

பாஸ்பரஸ் சந்தேகம்:

போலீசார் கூறுகையில், "முன்விரோதம் காரணமாக யாராவது பாஸ்பரசை தூவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும் இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

English summary
Paramakudi people were feared by sudden fire accidents there. Police were investigated about this incident and doubted some people speared the pass pares in the things.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X