சென்னையில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று மாலை போராட்டம் நடத்தினார்கள். பணி நிரந்தரம், நிரந்தர சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்கள்.

Part time teachers arrest in Chennai

ஆனால் மாலை 6 மணிக்கு பின்பும் அவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு இருக்கிறது.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது சேப்பாக்கம் பகுதியில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஆசிரியர்கள் சிலர் விதிகளை மீறியதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Part time teachers arrest in Chennai. They were protesting in Chepakkam. Police arrested them for crossing protest time limit.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற