For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிதண்ணீரில் “குட்டி மீன்கள்” – அதிர்ச்சியில் பழனி மக்கள்!

Google Oneindia Tamil News

பழனி: பழனியில் குடிநீரில் திடீரென்று மீன்கள் வந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பழனி நகருக்கு கொடைக்கானல் சாலையில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்தும், பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு அணையில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

போதிய மழை இல்லாததால் இந்த 2 அணைகளிலும் தற்போது தண்ணீர் குறைவாகவே உள்ளது.

கலங்கி வரும் குடிநீர்:

கலங்கி வரும் குடிநீர்:

இதனால் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே வருகிறது.

6 நாட்களுக்கு ஒரு முறை:

6 நாட்களுக்கு ஒரு முறை:

தற்போது நகருக்கு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரும் பல இடங்களில் பொதுமக்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

குடிநீரில் மீன்கள்:

குடிநீரில் மீன்கள்:

நேற்று மாலை அடிவாரம் திலகர் வீதியில் வினியோகம் செய்யப்பட்ட குடிதண்ணீரில் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் கலந்து வந்தன. முதலில் இந்த தண்ணீரை பார்க்காமல் குடித்த மக்களுக்கு குமட்டல் வந்தது.

நீர்மட்டம் குறைவு:

நீர்மட்டம் குறைவு:

தண்ணீர் பிடித்து தெளிந்த பிறகு பார்த்தபோதுதான் நீரில் மீன்குஞ்சுகள் மிதந்ததை பொதுமக்கள் கவனித்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் அணைகளில் தற்போது நீர்மட்டம் வேகமாக குறைந்துவிட்டது.

சுத்திகரிப்பு நிலையம்:

சுத்திகரிப்பு நிலையம்:

இதனால் சிறிய அளவிலான மீன்கள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பாலாறுஅணையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படவில்லை. அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி இதனை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளோம்.

நோய் தொற்று பாதுகாப்பு:

நோய் தொற்று பாதுகாப்பு:

பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் குடிநீரில் மருந்துகள் கலக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் என்று தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் மக்கள்:

அதிர்ச்சியில் மக்கள்:

பெரும்பாலான தெருக்களில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இதுபோல மீன்குஞ்சுகள் கலந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Palani people irritated with not wealthy drinking water yesterday. In that water lots of small fishes also came.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X