மேற்குத்தொடர்ச்சி மலையில் பலத்த மழை.. குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

People throng Courtallam water falls

நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் விடாமல் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் வரத்து அதிகரித்து ஐந்தருவி யில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி க்கப்பட்டது. மெயினருவியில் ஆர்ச்சைத் தொட்டு தண்ணீர் கொட்டுவதால் மெயினருவியில் கூட்டம் அலைமோதி வருகிறது. அணிகளும், பெண்களும் ஆனந்தமாக ஆர்ப்பரிப்போடு கொட்டும் அருவி நீரில் ஆனந்த்கமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
People throng Courtallam water falls as rain lashes western ghat in Kerala which is the catchment area.
Please Wait while comments are loading...