காமராஜர் போல ஒரு தலைவர் இல்லையே.. ஏக்கத்தில் தவிக்கும் மக்கள்.. சர்வே சொல்லும் செய்தி!
சென்னை: லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர்கள் குழு நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரையும் மக்கள் அறவே வெறுக்கிறார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். நல்ல தலைவர் வருவாரா, எப்போது வருவார் என்ற ஏக்கத்திலும், சோகத்திலும் மக்கள் உள்ளனர். அப்படிப்பட்ட தலைவர் உருவெடுக்கும்போது இந்த தலைவர்கள் எல்லாம் தூக்கி எறியப்படுவார்கள் என்பதையும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
பெருந்தலைவர் காமராஜரை நினைத்து மக்கள் இன்றும் கூட ஏங்குகிறார்கள். அவருக்குப் பிறகு வந்த அத்தனை பேரும் தமிழகத்தை கிட்டத்தட்ட கைகழுவி விட்டனர் அல்லது கைவிட்டு விட்டனர் அல்லது தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை அல்லது உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது ஒரு நல்ல தலைவருக்காக தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் உணர்வை வெகு எளிதாக புரிந்து கொள்ள முடியும். இப்போது உள்ளவர்களுக்கு மக்கள் மனதில் சற்றும் இடம் இல்லை என்பதையும் உணர முடிகிறது. காரணம், அத்தனை பேரும் "அரசியல்வாதி"யாக மட்டுமே இருப்பதால்.. யாருமே "மக்களுக்கான தலைவராக" இல்லை என்பதே.

கட்சிகளைப் பார்த்து காரித் துப்பும் மக்கள்
உண்மையில் மக்கள் அரசியல் கட்சிகளைப் பார்த்து காரித் துப்பியுள்ளனர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தக் கட்சிக்கும் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமை இல்லை என்று மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு கட்சிக்கும் தகுதி கிடையாது
தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் எதையும் தற்போது உள்ள கட்சிகள் தலைமையில் அமையும் எந்த ஆட்சியாலும் தீர்க்க முடியாது என்று 56 சவீதத்திற்கும் மேற்பட்டோர் கூறியிருப்பது ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளின் லட்சணத்தை விளக்குகிறது.

சீரழிக்கும் லஞ்சமும், ஊழலும்
தமிழகத்தை லஞ்சமும், ஊழலும்தான் சீரழித்து விட்டதாக பெரும்பாலான மக்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மது விலக்கு குறித்து மக்கள் மத்தியில் எந்த எழுச்சியும் காணப்படவில்லை என்பதை அரசியல்வாதிகளின் சதுரங்க ஆட்டத்தில் மக்கள் சிக்கி விட்டதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதை வைத்து இன்னும் கடைகளைத் திறந்து தமிழகத்தை மலேும் மது நாற்றமுடையதாக மாற்றுவார்கள் என நம்பலாம்.

மக்கள் மனதில் வாழும் பெருந்தலைவர்
பெருந்தலைவர் காமராஜர்தான் மக்கள் மனதில் இன்னும் முதல்வராக வீற்றிருக்கிறார் என்பது மிகுந்த இயல்பானதே. இதில் ஆச்சரியப்படத் தேவையே இல்லை. காரணம், அவருக்குப் பின்னர் வந்த யாருமே மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை என்பதால்.

காமராஜரைப் போல ஒரு தலைவர் இல்லையே
காமராஜருக்குப் பிறகு மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த ஒரு தலைவரைக் கூட மக்கள் பார்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதையே மக்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கின்றன.

அனைவருக்கும் பிடித்த முதல்வர்
காமராஜரை அனைத்துத் தரப்பினரும் தமிழகத்தின் சிறந்த முதல்வராக தூக்கி நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆண்டவர்களிலேயே காமராஜர் மட்டும்தான் மக்கள் மனதில் கொலு வீற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் கருணாநிதி
சிறந்த முதல்வர்கள் பட்டியலில் காமராஜருக்கு அடுத்த இடத்தில் எம்.ஜி.ஆர் வருகிறார். இவருக்கு 27.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காமராஜருக்கு அடுத்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல்வர்களில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில்தான் கருணாநிதி வருகிறார்.

சிங்கிள் டிஜிட் கருணாநிதி
திமுக தலைவர் கருணாதிக்கு மக்கள் மனதில் ரொம்ப மோசமான இடம் உள்ளது என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு காட்டுகிறது. அவருக்கான ஆதரவு சிங்கிள் டிஜிட்டில்தான் உள்ளது.

கருணாநிதி்க்கு அடுத்துதான் அண்ணா
அதேபோல திமுகவை நி்றுவியவரான அண்ணாவுக்கு, கருணாநிதிக்கு அடுத்த இடம் என்பதும் ஆச்சரியமானது. ஆனால் கருணாநிதிக்குக் கிடைத்த அளவுக்கு அண்ணாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

காமராஜருக்கு நிகராக வந்திருக்கலாம் அண்ணா
ஒரு வேளை கருணாநிதி அளவுக்கு வாய்ப்புகளும், பதவிகளும் அண்ணாவுக்குக் கிடைத்திருந்தால் காமராஜர் அளவுக்கு அவரும் ஒரு சிறந்த முதல்வராக திகழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ரொம்பக் கேவலம் ஜெயலலிதா
இந்தப் பட்டியலில் ரொம்பக் கேவலமான இடம் ஜெயலலிதாவுக்குத்தான். அதாவது இவர்களுக்குப் போக கடைசி இடம்தான் அவருக்கு. மக்கள் மனதில் ஜெயலலிதா மீது நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

காமராஜர் போல ஒரு காந்தம் தேவை
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது காமராஜர் போல செயல் திறன் பெற்ற, தெளிவான முடிவுகளை எடுக்கத் தெரிந்து, துணிச்சலுடன் செயல்படக் கூடிய, மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படக் கூடிய அப்பழுக்கற்ற ஒரு நல்ல தலைவர்தான் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
அந்த நல்ல தலைவர் கிடைக்கும்போது இந்தத் தலைவர்களுக்கு மக்கள் நிரந்தரமாக ஆப்பு வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.... ஆனால் இதே மக்கள்தான் அன்று காமராஜரைத் தோற்கடித்தவர்கள் என்பதும் இங்கு மறந்து விடக் கூடாத ஒன்று!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications