For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூவரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும்: பேரறிவாளன் தந்தை குயில்தாசன் கோரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Perarivalan's father hopes for son's release
கிருஷ்ணகிரி: தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை தமிழக அரசு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் தமது மகள் வீட்டில் வசித்து வரும் 73 வயதான குயில்தாசன் என்ற ஞானசேகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த தீர்ப்பு மூலம் வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம் எனினும் இது காலம் கடந்த பலன். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இருந்தது.

பெரியார் கொள்கையில் பற்று கொண்ட நாங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளவர் ஆக இருந்ததால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என கூறி பேரறிவாளனை அழைத்து சென்று பேட்டரி வைத்திருந்ததாக பொய் வழக்கில் சிக்க வைத்தனர்.

தற்போது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இருப்பினும் விரையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

பேரறிவாளன் இளமை காலம் சிறையில் சென்று விட்டது. எனினும் அவருக்கு திருமணம் செய்து வைக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் விடுதலைக்காக தமிழர்கள் போராடுவர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடங்கள் குற்றவாளியாகவே சித்தரித்து காட்டுகிறது. இதனால் பழி சுமத்தப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இந்த போக்கை ஊடங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குயில்தாசன் தெரிவித்தார்.

English summary
Elated over the Supreme Court commuting to life term the death penalty given to his son in the Rajiv Gandhi assassination case, Kuyildasan, the father of convict AG Perarivalan on Tuesday thanked Chief Justice AP Sathasivam for the historic verdict and appeal to early release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X