அடக்கொடுமையே.. ஓவியா விஷயம் சென்னை போலீஸ் கமிஷனர் வரை போய்விட்டது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போன்ற காட்சிகள் ஒளிபரப்பட்டதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த தொலைதொடர்பு சாதனங்களோ, கணினி பயன்பாடுகளோ இல்லாமல் ஒரு வீட்டில் 10 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்து ஒளிபரப்பி வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் அனைவரின் மனதையும் கஷ்டப்படுத்தியது ஆரவ் ஓவியா காதல் விவகாரம்

கடந்த இரண்டு நாட்களாகவே ஓவ்யா ஆரவை பார்த்து என்னை காதலிக்கிறாயா இல்லையா என்று திரும்பத் திரும்ப கேட்க, அதற்கு ஆரவ் நான் எப்போதும் அப்படி சொல்லவில்லை நாம் நண்பர்கள் என்று கூறிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்து ஓவியா ஆரவ் தன்னை ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

நீச்சல் குளத்தில் மூழ்கிய ஓவியா

நீச்சல் குளத்தில் மூழ்கிய ஓவியா

நேற்றைய நிகழ்ச்சியில் இறுதியில் ஒளிபரப்பப்பட்ட காட்சியில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள்ளேயே இருந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஓவியாவை ஸ்நேகனும், வையாபுரியும் ஓடிப் போய் தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கின்றனர்.

தற்கொலையா?

தற்கொலையா?

இதனால் பிக்பாஸ் வீட்டில் ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனையடுத்து அவர் வெளியேற்றப்பட்டுவிட்டார் என்று ஹைஸ்பீடில் ஓவியா அப்டேட்ஸ் வந்த வண்ணம் இருக்கின்றன.

உண்மையா

உண்மையா

இந்நிலையில் நடிகை ஓவியா உண்மையிலேயே தற்கொலைக்கு முயன்றாரா என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். இந்த நகலை நிகழ்ச்சி நடைபெறும் பிக்பாஸ் வீட்டின் காவல் எல்லைக்குட்பட்ட நாசரெத்பேட்டை துணை ஆணையருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

விதிகளால் மனஅழுத்தம்

விதிகளால் மனஅழுத்தம்

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிக்கப்பட்ட விதிகள் ஓவியாவிற்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல்கள் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான எண்டேமால், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவியால் ஏற்பட்டுள்ளது.

நடிப்பா?

நடிப்பா?

எனவே இது குறித்து ஓவியாவிடம் விசாரணை நடத்துவதோடு, டிஆர்பியை கூட்டுவதற்காக இது போன்ற நாடகத்தை விஜய் டிவி செய்ததா என்பதையும் விசாரிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An advocate filed petition to Commissioner of police demanding probe whether Oviya attempeted suicide or Vijay TV doing this for TRP.
Please Wait while comments are loading...