For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 ஆண்டில் இல்லாத புதிய உச்சம்... பெட்ரோல், டீசல் விலை விர்ர்ர்...!

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

    சென்னை : பெட்ரோல், டீசல் விலை இன்று ஒரே நாளில் 18 காசுகள் உயர்ந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.73க்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 76.48 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

    சர்வதேச சந்தியில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன. இந்நிலையில் 2017, ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

    கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அது உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு பயனை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில், தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட தொடங்கியது முதல் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது. வாட்டும் பெட்ரோல், டீசல்விலை உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    டெல்லியில் 4 ஆண்டில் புதிய உச்சம்

    டெல்லியில் 4 ஆண்டில் புதிய உச்சம்

    இந்நிலையில் இன்று திடீரென டீசல், பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.73க்கு விற்பனையாகிறது. கடந்த 2014ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி ரூ.76.06 காசுகளாக இருந்தது. அதற்கு பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு வந்துள்ளது. டீசலைப் பொறுத்தவரை, இதற்கு முன் ஒருலிட்டர் ரூ.64.22 காசுகள் இருந்த நிலையில், இன்று ரூ. 64.58 காசுகளாக உயர்ந்துள்ளது. இதுவும் டெல்லியை பொருத்தவரையில் முன்எப்போதும் இல்லாத உயர்வாகும்.

    சென்னையிலும் விலை விர்

    சென்னையிலும் விலை விர்

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.68.12 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.48 காசுகளுக்கும் விற்பனையாகிறது. எண்ணெய் நிறுவனங்களின் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே விலைஉயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படவில்லை

    ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படவில்லை

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கலால் வரி உயர்வு முக்கியமாக கருதப்பட்டது. இது தொடர்பாக பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை.

    வாட் வரியை குறைக்காத மாநிலங்கள்

    வாட் வரியை குறைக்காத மாநிலங்கள்

    கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.11.77 காசுகள் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.13.47 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் இரட்டிபாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் உற்பத்தி வரியை 2 ரூபாய் மத்தியஅரசு குறைத்தது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது, ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் சில தவிர மற்ற மாநிலங்கள் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன.

    English summary
    Petrol prices hit a four-year high of the new financial year at Delhi as Rs 73.83 per litre, while diesel reached an all-time high at Rs 64.69 per litre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X