For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திறந்த வெளியில் கொட்டும் பனியில் விடிய விடிய அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்: ஒருவர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி காட்பாடி குப்புசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளது போராட்டக்காரர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.உயிரிழந்த குப்புசாமி உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித் தொகையை குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறளாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Physically disabled person died: stalin pays homage

சென்னை எழிலகத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். சென்னை புறநகர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் எழிலகம் வந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.அவர்கள் அனைவரையும் போலீசார் எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர். இரவிலும் அவர்கள் அங்கேயே இருந்தனர்.

Physically disabled person died: stalin pays homage

இந்த நிலையில் இரவு 9 மணியளவில் ஸ்டேடியத்தில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மாதனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, 67 தலைவலிப்பதாக கூறினார். திடீரென்று அவர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

Physically disabled person died: stalin pays homage

உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குப்புசாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே குப்புசாமி உயிரிழப்புக்கு, திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை தராததே குப்புசாமி உயிரிழக்க காரணம் எனவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Physically disabled person died: stalin pays homage

மரணமடைந்த குப்புசாமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மாதனூர் ஆத்தோரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.தற்போது குப்புசாமியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மாற்றுத்திறனாளி இறந்த தகவல் அறிந்ததும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். மறைந்த குப்புசாமி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள சின்ன சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜாராம், 40 என்பவர் மயக்கமடைந்த நிலையில் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரையும் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்டாலின், மாற்றுத் திறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

Physically disabled person died: stalin pays homage

ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுத் திறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராமை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இதுவரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக்கட்டாக காவல் துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது.

இன்றைக்கு அ.தி.மு.க. அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அ.தி.மு.க. அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்றுத் திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, தி.மு.க. அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் அஞ்சலி:

இதேபோல குப்புசாமியின் உடலுக்கு மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், மல்லை சத்யா உள்ளிட்டோரும் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

English summary
Physically challenged persons were planning to picket the secretariat as a mark of protest with their set of demands. However they were arrested as a precautionary step and housed at Rajarathinam stadium, wherein one elderly person fell ill and was taken to the hospital. However despite the treatment he died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X