For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

106 சிறைக்கைதிகள் உள்பட 8.39 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்டூ தேர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று துவங்கியது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமாக தேர்வை எழுதினர்.

இத்தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தனித்தேர்வர்களும்:

தனித்தேர்வர்களும்:

பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

மொத்த மையங்கள்:

மொத்த மையங்கள்:

புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் சிறைக்கைதிகள்:

தேர்வு எழுதும் சிறைக்கைதிகள்:

தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106 சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

4 ஆயிரம் பறக்கும் படைகள்:

4 ஆயிரம் பறக்கும் படைகள்:

பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிட் அடித்தால் தண்டனை:

பிட் அடித்தால் தண்டனை:

பிட் அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Plus two examinations starts today in Tamil nadu and puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X