மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்: மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

  சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

  தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழா மண்டபத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

  விழாவில் அவர் பேசுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மழையால் உயிரிழந்தவர்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மோகன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

   பொறுப்புணர்வு

  பொறுப்புணர்வு

  மக்களின் நலன் கருதியே பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். பத்திரிகைகள் மக்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.

   அச்சம் அடைந்த ஆங்கிலேயர்கள்

  அச்சம் அடைந்த ஆங்கிலேயர்கள்

  பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன. பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர். சமூகத்தின் மனநிலையை சரியாக எடுத்துக் காட்டுபவை ஊடகங்களே.

   தகவல் தொழில்நுட்பம்

  தகவல் தொழில்நுட்பம்

  தனியார் ஊடகங்களும் மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஜனநாயகத்துக்கு முக்கியமானது. ஊடகங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

   வளர்ச்சிக்கும் வாழ்த்து

  வளர்ச்சிக்கும் வாழ்த்து

  தினத்தந்தி பத்திரிகைக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அதன் வளர்ச்சிக்கும் வாழ்த்துகளை கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi assured to extend his support and financial assistance to rain affected areas in TN.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற