இது உளறல் அல்ல உண்மை.. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வெளிவரும்! போட்டுத்தாக்கும் ராமதாஸ்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்.

அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

டிவிட்டரில் கருத்து
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள ராமதாஸ், அது குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

இப்படிதான் வெளிவரும்
அதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை சசிகலா தரப்பு சுருட்டிக் கொண்டது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - இது உளறல் அல்ல. உண்மை. நீண்டநாட்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித் தான் உண்மையாக வெளிவரும்! என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விவாதப்பொருளாகியுள்ளது
இதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா குறித்து அக்கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சு பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
