காவிரி: தமிழகம் முழுவதும் பாமகவினர் ரயில் மறியல்- சென்னையில் அன்புமணி கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  காவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு-வீடியோ

  சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாநிலம் முழுவதும் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

  PMK Rail roko protest Anbumani Ramadoss arrest in Chennai

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  PMK Rail roko protest Anbumani Ramadoss arrest in Chennai

  சென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்புமணி தலைமையில் பி.ஆர். பாண்யடின் மற்றும் பாமகவினர் எழும்பூர் சாலையில் பேரணியாக வந்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் ரயிலை மறித்து என்ஜின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் தடையையும் மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  PMK Rail roko protest Anbumani Ramadoss arrest in Chennai

  இதே போல புதுக்கோட்டை, திருச்சி, திண்டிவனம் உள்ளிட்ட பல ஊர்களில் ரயில் மறியல் போராட்டத்தில் பாமக தொண்டர்கள் ஈடுபட்டனர். திருச்சியில் திண்டுக்கல்- பொள்ளாச்சி ரயில் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தியதால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தொண்டர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

  PMK Rail roko protest Anbumani Ramadoss arrest in Chennai

  இதனிடையே எழும்பூரில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The police arrested the cadre of PMK, Cauvery Management Board, including the PMK Youth wing Leader Anbumani Ramadoss, who was stage rail roko protest in Egmore, Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற