ரஜினிகாந்த் கட்சியுடன் பாமக கூட்டணி... தினகரனின் அமமுகவுக்கு இப்பவே நோ- தமிழருவி மணியன்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார் தமிழருவி மணியன். ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்குவார் என்று கூறியுள்ள தமிழருவி மணியன், ரஜினி தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக அணியில் இருக்கும் பாமக, ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைக்கும். இதர கட்சிகளும் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் இணைய காத்திருக்கின்றன.
2014-ல் பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இணைத்தது போல் தற்போதும் ரஜினிக்காக ஒரு வானவில் கூட்டணி உருவாக்கப்படும். பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பாரா? இல்லையா என்பது பற்றி தெரிவிக்க முடியாது.
அதே நேரத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார். தினகரனுடன் கூட்டணி அமைத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுகிறார் என தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications