கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிட சென்ற இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒசூரில் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒசூரிலிருந்து மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டை முற்றுகையிட சென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் ஒசூர் எல்லையில் வைத்து கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒசூரில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மைசூர் நோக்கி நடை பயணம் சென்று கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடுவதாக அறிவித்துவிட்டு கிளம்பினர். சுமார் 500 பேர் நடை பயணத்தில் பங்கேற்றனர்.

Police arrested Indian Communist Party members at Hosur

இருப்பினும் ஒசூர் பஸ் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏற்கனவே கர்நாடக-ஒசூர் எல்லையான அத்திபெலே பகுதியில், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police arrested Indian Communist Party members at Hosur who start to walk for siege Krishna Rajajakar dam near Mysore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற